மும்பை: சொமேட்டோ நிறுவனம் சைவ உணவு டெலிவரி செய்வோருக்கு பச்சை நிற சீருடை மற்றும் பச்சை பை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அனைவரும் சிவப்பு நிற உடை அணிந்தே டெலிவரி செய்வார்கள் என அதன் தலைமை செயலதிகாரி தீபிந்தர் கோயல் விளக்கம் கொடுத்துள்ளார்.
இன்றைய இந்தியாவின் மிக முக்கியமான துறைகளில் ஒன்று ஆன்லைன் புட் டெலிவரி சேவை தான். ஆன்லைனில் மிகப்பெரிய உணவு டெலிவரி செயலியாக சோமேட்டோ இருந்து வருகிறது. சோமேட்டோ வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து உணவு டெலிவரி செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் சொமேட்டோ நிறுவனம் சைவ உணவு டெலிவரி செய்வோருக்கு பச்சை நிற உடை மற்றும் பச்சை பை அறிமுகப்படுத்தியது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ 100 சதவீத சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு pure veg mode மற்றும் pure veg fleet ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பலவேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தன. இந்நிலையில், சோமேட்டோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய தீபிந்தர் கோயல் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், உலகிலேயே இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களிடம் இருந்து நாங்கள் பெற்ற முக்கியமான கருத்து என்னவென்றால், தங்கள் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, எப்படி கையாளப்படுகிறது என்பதில் அவர்கள் மிகவும் குறிப்பாக இருக்கிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 100% உண்மை விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்காக சோமேட்டோ நிறுவனம் pure veg mode மற்றும் pure veg fleetஐ இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த பியூர் வெஜ் மோடில் சுத்தமான சைவ உணவை மட்டுமே வழங்கும் உணவகங்கள் மட்டுமே இடம்பெறும்.
அசைவ உணவுகளை வழங்கும் எந்த ஒரு உணவகமும் இதில் இருக்காது. எங்களின் பிரத்யேக பியூர் வெஜ் ஆப்ஷனில் இந்த பியூர் வெஜ் உணவகங்களில் இருந்து பெறப்படும் ஆர்டர்களை மட்டுமே டெலிவரி செய்வார்கள். அதாவது அசைவ உணவு அல்லது சைவ உணவகம் வழங்கும் வெஜ் சாப்பாடு கூட எங்கள் பச்சை பியூர் வெஜ் பச்சை டெலிவரி பையில் செல்லாது.
இந்த பியூர் வெஜ் மோட் அல்லது பியூர்வெஜ் ஆப்ஷன் என்பது எந்தவொரு மத அல்லது அரசியல் சார்பில் இல்லை. இது எந்த ஒரு மதத்தையும் அந்நியப்படுத்த எடுக்கப்பட்ட முடிவு இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் அதிகரித்த நிலையில் சோமேட்டோ நிறுவனம் தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கியுள்ளது. மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தீபிந்தர் கோயல். அதில், சைவ உணவு உண்பவர்களுக்கான சிறப்பு வசதியை அகற்ற முடிவு செய்துள்ளோம். எங்களின் சிவப்பு நிற சீருடை டெலிவரி பார்ட்னர்கள் அசைவ உணவுடன் தவறாக தொடர்பு கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்கிறோம். உங்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம் என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
என்னென்ன கதையெல்லாம் சொல்றாங்க பாருங்க!
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}