சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாம் திறந்த வெளியில் நின்றால், சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரிந்தது. பக்கத்தில் நிழலாக தெரியாததை மாணவர்கள், பொதுமக்களுக்கு நிழல் இல்லாத நாள் தொடர்பான அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை பார்த்து அதன் அறிவியல் விவரங்களை தெளிவாக எடுத்து கூறினார்கள். தங்களை சுற்றியுள்ள பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும், உறவினர்களுக்கும் இது தொடர்பான அறிவியல் உண்மைகளை விளக்கி கூறினார்கள்.
நிழல் இல்லாத நாள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியைகள் முத்துலெட்சுமி , முத்துமீனாள் ஆகியோர் மாணவர்களுக்கு கொடுத்த தகவலில், பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டிற்கு இரண்டு முறை வரும். சூரியனின் வீழ்ச்சி அட்ச ரேகைக்கு சமமாக மாறும் போது பூஜ்ஜிய நிழல் நிகழ்ச்சி நடக்கிறது. சூரிய கதிர்கள் தரையில் உள்ள பொருட்களில் செங்குத்தாக விழும் . அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும். இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் அன்று நாம் நின்றால் சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரியும் பக்கத்தில் நிழலாக தெரியாது.
இதனை கருத்தில் கொண்டு மாணவிகள் ரித்திகா, கனிஷ்கா , கவிஷா, யோகேஸ்வரன், ரியாஸ்ரீ, லேகாஸ்ரீ,ஸ்டெபி, விஜய்கண்ணன் ஆகியோர் தங்கள் வீடுகளின் அருகில் நிழல் இல்லாத நாளை உருளை வடிவ பொருளை வைத்து செய்து பார்த்தனர். தங்களின் நிழல் தங்களுக்கு தெரியாததை கண்டு ஆச்சிர்யப்பட்டனர். தங்களுடன் படிக்கும் மற்ற மாணவர்களுக்கும் எடுத்து கூறினார்கள். தங்களின் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் இதனை செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க வலைதல பதிவுகள் , தகவல்கள் தங்களுக்கு நல்ல உதவியாக இருந்ததாக கூறினார்கள்.
மதிமுக உட்கட்சி விவகாரம்: துரை வைகோவை சமாதானம் செய்யும் வைகோ!
76 ல் ஷாவால்தான் திராவிட மாடல் ஆட்சி கலைக்கப்பட்டது: டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்!
Out of control இல்லை.. Out of cantact.. முதல்வர் பேச்சுக்கு அண்ணாமலை அதிரடி பதில்!
உ.பிக்கு என்னாச்சு?.. ஒரே எஸ்கேப்பா இருக்கே.. மகளின் மாமனாருடன் தலைமறைவான பெண்!
சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
{{comments.comment}}