காங்கிரஸ் பக்கம் தாவிய ஜெகன் தங்கச்சி ஷர்மிளா.. கேசிஆருக்கு அதிகரிக்கும் சிக்கல்!

Nov 03, 2023,03:47 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரப் போவதாக ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஷர்மிளா அறிவித்துள்ளார்.


ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசியல் செய்து வருவது போல தெலங்கானாவில் அவரது தங்கை ஷர்மிளா அரசியல் செய்து வருகிறார். ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வரும் ஷர்மிளா, நடக்கப் போகும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் அணி சேர்ந்துள்ளார்.


வருகிற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் காங்கிரஸுக்கு ஆதரவு தரப் போவதாகவும் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து ஆதரவையும் தெரிவித்துள்ளார்.




தனது முடிவு குறித்து ஷர்மிளா கூறுகையில்,  எனது கட்சி வாக்குகள் பிரிவைத் தடுக்கும் வகையில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. வாக்குகள் பிரிந்தால் கே.சந்திரசேகர ராவுக்குத்தான் அது சாதகமாக போகும். எனவேதான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.


பிஆர்எஸ் கட்சி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. அது முடிய வேண்டும். அதற்கு காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதை உறுதி செய்யவே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளோம். ஊழல் கறை படிந்த, மக்கள் விரோத பிஆர்எஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்த தியாகத்தை நாங்கள் செய்கிறோம் என்றார் ஷர்மிளா.


கடந்த 2021ம் ஆண்டுதான் ஷர்மிளா கட்சி தொடங்கினார். இதுவரை எந்தத் தேர்தலிலும் அவரது கட்சி போட்டியிட்டதில்லை. தனது கட்சி வளர்ச்சிக்காக அவர் 3800 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபயணமும் கூட மேற்கொண்டிருந்தார். மாநிலஅளவில் தீவிர சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்க பாடுபட்டார். ஆனால் தற்போதைய தேர்தலில் அவர் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருப்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்: தவெக தலைவர் விஜய்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

தங்கம் வாங்க இதுவே தங்கமான நேரம்... தொடர் குறைவில் தங்கம் விலை!

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 08, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

வெஜ் பிரியாணிக்கு பதிலாக.. நான்வெஜ் கொடுத்த ஸ்விக்கி.. ஹோட்டல் உரிமையாளர் கைது..!

அதிகம் பார்க்கும் செய்திகள்