தெலங்கானா காங்கிரஸுக்குப் போன தங்கச்சி சர்மிளா.. ஆந்திராவில் அண்ணன் ஜெகனுக்கு சிக்கல் வருமா?

Jan 04, 2024,03:46 PM IST

டெல்லி: ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா தான் நடத்தி வந்த ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை இன்று கலைத்து விட்டு, காங்கிரஸில் இணைந்து விட்டார். தெலங்கானாவில் ஏற்கனவே ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு சர்மிளாவின் வரவு புதுப் பலமாக அமைந்துள்ளது.


மறைந்த காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் தனது தந்தை மறைவுக்குப் பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்து முதல்வராகவும் இருக்கிறார். இவரது தங்கைதான் சர்மிளா. ராஜசேகர ரெட்டி மறைவிற்கு பிறகு ஜெகன்மோகன் ரெட்டிக்குத் துணையாக இருந்து வந்தார் சர்மிளா. அவரது கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டும் வந்தவர் ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளா. ஆனால் பின்னர் ஜெக னுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை தொடங்கினார்.




சமீப காலமாக அவர் தனது அரசியல் வேகத்தை குறைக்கத் தொடங்கினார். மாறாக காங்கிரஸை நோக்கி தனது பார்வையைத் திருப்பி வந்தார்.  கடந்த நவம்பர் 3ஆம் தேதி திடீரென்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் சர்மிளா. தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும் சர்மிளா அறிவித்திருந்தார். பிறகு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவும் தெரிவித்திருந்தார்.


தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அப்போதே ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்க போவதாக பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் இன்று ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியை காங்கிரஸில் இணைத்து தானும் அக்கட்சியில் இணைந்தார் சர்மிளா.




டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சர்மிளா. சர்மிளாவுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து கார்க்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் சோனியா காந்தியையும் சர்மிளா நேரில் பார்த்து வாழ்த்து பெற்றார்.


சில மாதங்களில் ஆந்திரா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில்  இணைந்துள்ளது ஜெகன் மோகன் ரெட்டிக்கு தர்மசங்கடமாகியுள்ளது. ஆந்திரா சட்டசபைத் தேர்தலில் சர்மிளாவை வைத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு காங்கிரஸ் நெருக்கடி தரலாம் என்று எதிர்பார்க்க்படுகிறது. ஒரு வேளை அப்படி நடந்தால் பரபரப்பான அண்ணன் - தங்கச்சி சண்டையை ஆந்திராவில் எதிர்பார்க்கலாம். மறுபக்கம் சந்திரபாபு நாயுடுவும் முனைப்புடன் இருக்கிறார்.. இதனால் பலமுனை தாக்குதலை ஜெகன் மோகன் ரெட்டி சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்