ஓவர் சவுண்டா இருக்கே.. தடை செய்யப்பட்ட சைலன்சர்கள் விற்பனை.. டிடிஎப் வாசன் கடைக்கு நோட்டீஸ்!

May 22, 2024,01:38 PM IST

சென்னை: அதிக ஒலி எழுப்பும், தடை செய்யப்பட்ட சைலன்சர்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறி யூடியூப்பர் டி.டி.எஃப். வாசன் கடைக்கு போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.


யூடியூபரான டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் சாகசம் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். வீலிங் செய்வது, வேகமாக பைக் ஓட்டுவது, சாகசம் செய்வது என்று தொடர்ந்து சாலை விதிகளை மதிக்காமலேயே செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி  பெங்களூரு சாலையில் பைக்கில் செல்லும் போது வீலிங் செய்ய முயன்று தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி காயம் அடைந்தார். காயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 




விபத்தில் டிடிஎஃப் வாசனின் கை எலும்பு முறிந்து, பலத்த காயம் ஏற்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி, பரபரப்பானது. காவல் துறையினர் வாசனை கைது செய்தனர்.  அவர் மீது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் 3 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். வாசனின் மனு மூன்று முறையும் தள்ளுபடி செய்யப்பட்டது. மறுபக்கம், வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து (06.10.2023 முதல் 05.10.2033 வரை) காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். 


இந்த நிலையில் டிடிஎப் வாசனுக்கு ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார். பைக் ஓட்ட முடியாத காரணத்தால், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது கடையில், அதிக ஒலி எழுப்பும், தடை செய்யப்பட்ட சைலன்சர்கள் விற்பனை செய்யப்படுவதாக பெறப்பட்ட புகாரை தொடர்ந்து, சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் டி.டி.எஃப், வாசனின் வாகன உதிரிபாகங்கள் கடைக்கு போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!

news

கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

அதிகம் பார்க்கும் செய்திகள்