யார் இந்த விக்னேஷ் புதூர்?.. 3 விக்கெட்களைச் சாய்த்து அதகளம்.. மிரண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

Mar 23, 2025,10:20 PM IST

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் மும்பை அணியின் விக்னேஷ் புதூர். 23 வயதாகும் விக்னேஷ் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு புதியவர். முதல் போட்டியிலேயே முத்திரை பதித்து விட்டார். 17 ரன் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்துள்ளார் விக்னேஷ்.


கேரளாவின் மலப்புரம் பகுதியை சேர்ந்த இடது கை ஸ்பின்னர். இவரை 30 லட்சத்திற்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. மும்பை அணி ஏலத்தில் எடுத்தால் சாதாரண ஆளாகவா இருப்பார் அவர்? உண்மை தான் முதல் போட்டியிலேயே 3 விக்கெட்களை தூக்கி மிரட்டி விட்டார். 


கேரளாவில் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி அனுபவம் கொண்டவர் இவர். தன்னுடைய 11வது வயதில் இருந்து இவர் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.  கேரளா கிரிக்கெட் லீக் போட்டியில் அலிப்பி ரிப்பில்ஸ் அணிக்காக விளையாடி புகழ்பெற்றவர். அதில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி 3 பெரிய விக்கெட்களை கைப்பற்றினார். இது தான் மும்பை அணியை இவரை ஏலத்தில் ஐபிஎல்.,க்காக எடுக்க தூண்டியது.




ஐபிஎல் கிரிக்கெட் 2025 தொடரின் நான்காவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் இரண்டாவது விக்கெட்டிற்க ஜோடி சேர்ந்த ருதுராஜ் கைக்வாட் - ரவிந்திரா ஜோடி ரன்களை விளாசியது. இதனால் சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.


இதில் சென்னை அணியின் ருதுராஜ் வெறும் 22 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். இது ஐபிஎஸ் தொடரில் இவர் அடிக்கும் 19 வது அரைசதம் ஆகும். ஐபிஎல் தொடரில் இதுவரை 67 போட்டிகளில் விளையாடி உள்ள ருதுராஜ் 2380 ரன்கள் எடுத்துள்ளார். இன்றைய போட்டியிடன் சேர்த்து மொத்தம் 19 அரைசதங்களை விளாசி உள்ளார். 2 சதங்களையும் எடுத்துள்ளார். ஐபிஎஸ் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன் ஸ்கோர் 108 ஆகும்.


தனது 19வது அரைசதத்ததை கடந்த சில நிமிடங்களிலேயே மும்பை அணியின் விக்னேஷ் புதுர் வீசிய பந்தில் ஜாக்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்