பாஸ் பாஸ்.. இட்லி ரெடி.. சட்னிக்கு எங்க போறது.. இருக்கே அதுக்கும் இன்ஸ்டன்ட் மிக்ஸ்!

Aug 28, 2023,02:44 PM IST
- மீனா

ஒரு இன்ஸ்டன்ட் மிக்ஸ் வைத்து இத்தனை வகையாக கூட சமையல் செய்ய முடியுமா என்று ஆச்சரியப்படும் வகையில் நம்முடைய சீரிஸ் சீரியஸாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த இன்ஸ்டன்ட் மிக்சை வைத்து இதுவரையிலும் இட்லி, அடை தோசை, மசால் வடை, தோக்ளா போன்ற ரெசிபிகளை பார்த்து வந்தோம்.  இதெல்லாம் செஞ்சுட்டு தொட்டுக் சட்னி வேணும் இல்லையா.. ஸோ.. நாம இன்னிக்கு சட்னி பத்திதான் பார்க்கப் போறோம்.. அதுவும்  இன்ஸ்டன்ட் சட்னி பொடியை எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கப் போறோம்.

இட்லி தோசை எதுவாக இருந்தாலும் அதற்கு என்ன சட்னி செய்யலாம் என்றுதான் அதிகம் குழம்ப வேண்டி இருக்கும். தக்காளி சட்னி, கார சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி என்று விதவிதமாக எத்தனை சட்னிகள் இருந்தாலும் கூட நமக்கு எல்லாவற்றையும் செய்வதற்கு அதிகப்படியான நேரமும் எடுக்கும். ஆனால் நம் அனைவருக்கும் பிடித்தமானது தேங்காய் சட்னி. இதை இன்ஸ்டண்ட் பொடியாக செய்து வைத்துக் கொண்டால் நினைத்த நேரத்தில் சட்னி ரெடி பண்ணி விடலாம்.



வாங்க அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். முதலில் இன்ஸ்டன்ட் சட்னி பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை-1 கப்
பொட்டுக்கடலை-2 கப்
உளுந்தம் பருப்பு-1  கப்
காய்ந்த மிளகாய்- 15
தேங்காய் துருவல்-1 கப்
பூண்டு-14 பல் 
உப்பு -தேவையான அளவு
கருவேப்பிலை-தேவையான அளவு

முதலில் அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து, அதில் வேர்க்கடலையை போட்டு பச்சை வாசனை போகும் அளவிற்கு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு ஒரு தட்டில் கொட்டி சூடு போகும் அளவிற்கு ஆறவிட வேண்டும்.

பிறகு அதே பாத்திரத்தில் பொட்டுக்கடலையும் போட்டு லேசாக வறுத்து அதையும் தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு இதே போல் உளுந்தம் பருப்பையும் பாத்திரத்தில் போட்டு ஓரளவுக்கு சிவந்து வரும் அளவிற்கு வறுத்து அதையும் தட்டில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தேங்காய் துருவலையும் அதை  பாத்திரத்திலேயே சேர்த்து ஓரளவுக்கு நிறம் மாறி ஈரப்பதம் போகும் அளவிற்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதே பாத்திரத்தில் மிளகாய் வத்தல் ,பூண்டு, உப்பு, கருவேப்பிலை இப்படி ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்கு வறுத்து கொள்ள வேண்டும், ஆனால் நிறம் மாறக்கூடாது.

இப்படி வறுத்த எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஆறவிட வேண்டும். பிறகு இதனை மிக்ஸி ஜாருக்கு மாற்றி நமக்கு தேவையான பதத்திற்கு கொரகொரப்பாக அல்லது நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் இப்பொழுது நமக்கு தேவையான இன்ஸ்டன்ட் சட்னி பொடி ரெடி. 

அதே தட்டில் மாற்றி சிறிது நேரம் ஆறவிட்டு பிறகு கிளாஸ் ஜாரில் ஸ்டோர் செய்து கொள்ளலாம். நாம் பக்குவமாக வறுத்து வைத்துக் கொண்டால் இதை அப்படியே வெளியே வைத்து கொள்ளலாம். பிரிட்ஜில் ஸ்டோர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது நமக்கு தேவையான நேரத்தில் சட்னி செய்வதற்கு பதிலாக இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி தாளித்துக் கொண்டால் இன்ஸ்டன்டாக நமக்கு தேங்காய் சட்னி ரெடி ஆகிவிடும். 

இனிமேல் எல்லாம் செய்து விட்டு சட்னி அரைக்க மறந்துட்டோமே என்று பதற்றப்பட தேவையில்லை.  அவசரமாக ஆபீஸ் போனால் கூட இந்த பொடியை பாக்ஸில் கொண்டு போய் தண்ணீர் மட்டும் ஊற்றிக்கொண்டால் உங்களுக்கு நிமிடத்தில் சட்னி ரெடியாகி விடும். வாவ்.. அப்படின்னு வாய் மகிழ்ச்சியில் விரிகிறதா.. அப்படியே என்ஜாய் பண்ணிப் பாருங்க பாஸ்.

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்