கார் வாங்க போறீங்களா.. பார்க்கிங் செய்ய இடம் இருக்கா?.. சென்னையில் போக்குவரத்து ஆணையம் அதிரடி!

Mar 12, 2025,06:44 PM IST

சென்னை: இனி கார் வாங்குபவர்கள் பார்க்கின் இடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கார் இருந்தால் தான் கெத்து என்ற மனநிலையில் பலரும் பெருமைக்காக கார் வாங்குகின்றனர். முன்பெல்லாம் வீட்டிற்கு ஒரு கார்கள் வாங்கும் காலம் மலையேறிப் போய் தற்போது தனி நபர்கள் உபயோகத்திற்காக தனித்தனி கார்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், ஒரு வீட்டில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று கார்கள்  வரை வைத்துள்ளனர். இப்படி அதிகமாக கார் வைத்துள்ளதால், சென்னையில் மொத்தம் எவ்வளவு கார்கள் இருக்கிறது என்பதை தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.




அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு  கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் 92 லட்சம் கார்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


இதில், 14,000 கார்கள் மட்டுமே பொதுப் பார்க்கிங்கில் நிறுத்த இட வசதி உள்ளது. மற்ற கார்கள் அனைத்தும் இடவசதி இல்லாத காரணத்தால் சாலைகளிலும் தெருக்களிலும் நிறுத்தி வைக்கின்றனர். இதன் காரணமாக சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப வாகனம் பெருக்கமும் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. 


இந்த நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த  போக்குவரத்து ஆணையம் ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது கார் வாங்குவோர் பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றுகளை  கட்டாயமாக இணைக்க வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மத்திய அரசு மீதான விமர்சனத்தை மறைக்கக் கூட பெரியார்தான் உதவுகிறார்.. விஜய் பலே அறிக்கை!

news

எல்லாமே பொய்.. மோகன்பாபு மீதான புகார்களை முற்றாக நிராகரிக்கிறேன்.. செளந்தர்யா கணவர் விளக்கம்!

news

செளந்தர்யா விபத்தில் மரணிக்கவில்லையா.. கொலை செய்யப்பட்டாரா?.. புதிய புகாரால் திடீர் பரபரப்பு

news

வத்தலகுண்டு அருகே அமையவிருந்த டோல்கேட்... அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

news

நிறைய மொழிகள் கத்துக்கலாம்.. தப்பில்லை.. எனக்கு 8 மொழிகள் பேசத் தெரியும்.. சொல்கிறார் சுதா மூர்த்தி

news

புதுச்சேரி முதல்வரின் சூப்பர் அறிவிப்பு.. மகளிர் உதவித் தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2500 ஆக உயர்வு!

news

கார் வாங்க போறீங்களா.. பார்க்கிங் செய்ய இடம் இருக்கா?.. சென்னையில் போக்குவரத்து ஆணையம் அதிரடி!

news

என் கணவர் படத்திற்கு மட்டும்.. ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனம்.. நடிகை ஜோதிகா ஆதங்கம்!

news

குளுகுளு வானிலை.. தமிழ்நாட்டில் கனமழைக்கும், மிதமான மழைக்கும் வாய்ப்பு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்