நிர்மலா சீதாராமன் சொன்ன "குறை".. பளிச்சென பதில் கொடுத்த சின்மயி!

Aug 11, 2023,02:51 PM IST
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசும்போது தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதம் படிக்க விடாமல் தடுத்து விட்டதாக குமுறல் வெளியிட்டிருந்தார். இதற்கு பிரபல பாடகி சின்மயி புள்ளிவிவரத்துடன் சூப்பராக பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீண்ட காலமாகவே இந்தி கற்றுக் கொள்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தி மாஸ்டர்களும் தெருவுக்கு ஒருத்தர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களிடம் போய் இந்தி கற்கும் குழந்தைகளும் ரொம்ப காலமாகவே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தி கற்பது என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தீண்டத்தகாததாக ஒரு காலத்திலும் இருந்ததில்லை. இந்தி கற்பதை யாரும் தடுத்ததும் கிடையாது. 



அதை விட முக்கியமாக, அந்தக் காலத்தில் எல்லாம் (அதாவது திராவிடம்  இப்போது உள்ளதை விட அதிகமாக வலுவாக இருந்த காலத்தில்) காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை, முழு ஆண்டு விடுமுறைகளின்போது பிள்ளைகளை சும்மா உட்கார விட மாட்டார்கள். மாறாக போய் இந்தி கத்துக்கோ, டை���்பிங் கத்துக்கோ என்று அனுப்பி விடுவார்கள். ஆக மொத்தம் தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திக்கும் நிறைய நெருக்கம் தான் இருந்துள்ளதே தவிர விலக்கம் இருந்ததில்லை.

என்ன ஒரு விஷயம்னா.. இதை நீ செஞ்சே ஆகணும், கத்துக்கிட்டே ஆகணும் அப்படின்னு யாராவது கட்டாயப்படுத்தினால் தமிழ்நாட்டுக்காரர்கள் கேட்க மாட்டார்கள்.. ஏன் என்று எதிர்கேள்வி கேட்பார்கள். அப்படித்தான் இந்தியை கட்டாயப்படுத்தியபோதும் கேட்டார்கள்.. அதுதான் இந்தி எதிர்ப்பு போராக, போராட்டமாக, மனோபாவமாக மாறியது. இப்போது வரை தமிழ்நாட்டு மக்கள் இந்திக்கு எதிரானவர்கள் கிடையாது. இன்னும் தெளிவாகச் சொன்னால், இந்தி பேசுவோர் மிக மிக மகிழ்ச்சியுடன் வந்து போக விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு முதன்மை இடத்தில் உள்ளது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், தமிழ்நாடும், இந்தியும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை.

இந்த நிலையில்தான் இந்தி, சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள விடாமல் தடுத்து விட்டதாக  லோக்சபாவில் கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன். அவரது கூற்றை தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் மறுத்து வருகிறார்கள். அந்த வகையில், பாடகி சின்மயியும் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:

சென்னையோ அல்லது தமிழ்நாட்டில் வேறு பகுதியிலோ, ஒருவர் எந்த பாஷையை கற்க விரும்புகிறாரோ அதை அவரால் தாராளமாக கற்க முடியும். உண்மையில் தமிழ்நாட்டில்தான் இந்தி கற்போர் அதிக அளவில் உள்ளனர். இதை தென்னிந்திய இந்தி பிரசார சபையின் புள்ளிவிவரத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். இது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டேதான் போகிறது.  மேலும் இந்தியில் உயர்ந்த இடத்தில் தேர்ச்சி பெறுவோரும் தமிழ்நாட்டில்தான் அதிகம்.

நான் 2வது மொழியாக தெலுங்கு, இந்தி கற்றுக் கொண்டேன், சமஸ்கிருதம் கற்றுக் கொண்டேன். ஏன் ஜெர்மன், பிரெஞ்சு கூட கற்றுக் கொண்டேன். எல்லாமே சென்னையில்தான் கற்றுக் கொண்டேன். எனது முதல் கசின் படகா மொழி பேசுவார், துளு பேசுவார். தமிழ், இந்தியுடன் இவையும் பேசுவார்.

மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரி 1906ம் ஆண்டிலிருந்தே இருக்கிறது.  சமஸ்கிருதம் கற்பதற்குக் கடினமான மொழி. மற்ற மொழிகளைக் கூட எளிமையாக கற்றுக் கொண்டு விட முடியும். இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட எனது வகுப்புத் தோழிகள் பலரும் கூட சமஸ்கிருதம் கடினம் என்பார்கள். 

மக்கள் கற்க விரும்புவதை, பேச விரும்புவதை, சாப்பிட விரும்புவதை, வழிபட விரும்புவதை ஏன் செய்ய முடியாது.. யார் அதைத் தடுப்பார்கள்? என்று கூறியுள்ளார் சின்மயி.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்