உங்க பேரில் எத்தனை சிம் கார்டு இருக்கு தெரியுமா?.. அறிந்து கொள்ள இதோ ஈஸி வழி!

Jul 16, 2024,05:16 PM IST

டில்லி :   உங்களின் மொபைல் போன் தொலைந்து விட்டது என்ற இனி எங்கும் அலை வேண்டாம். இவர்களிடம் புகார் கொடுத்தால் உங்கள் மொபைல் போன் கிடைக்கும். அது மட்டுமல்ல உங்களின் மொபைல் நம்பர் யாருடைய பெயரில் உள்ளது? உங்கள் பெயரில் தான் உள்ளதா? உங்களுடைய மொபைல் மற்றும் இன்டர்நெட் இணைப்பு பாதுகாப்பாக உள்ளதா? என்பது போன்ற பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.


மத்திய தொலைத்தொடர்பு துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் தான் TAFCOP. இந்த இணையதளத்திற்கு சென்றாலே இந்திய தொலைத் தொடர்பு சட்டம் குறித்த விபரங்கள், உங்களின் மொபைல் நம்பர் யாருடைய பெயரில் உள்ளது? அது உங்கள் பெயரில் தான் உள்ளதா? உங்களின் பெயரில் இருக்கும் பயன்படுத்தப்படாத மொபைல் எண் ரத்து செய்வது, இந்திய நம்பர்களில் இருந்து வரும் சர்வதேச போன் கால் தொந்தரவுகள், மொபைல் மூலம் நடக்கும் மோசடிகள், உங்களின் மொபைல் நம்பர் அல்லது இன்டர்நெட் இணைப்பு தவறாக பயன்படுத்தப்படுகிறதா? உங்களின் மொபைல் போன் தொலைந்தோ அல்லது திருடோ போய் விட்டதா? இப்படி மொபைல் போன்ற தொடர்பாக எந்த சேவையை பெற வேண்டும் என்றாலும் அல்லது புகார் அளிக்க வேண்டும் என்றாலும் இந்த இணையதளத்திற்கு சென்று தெரிவிக்கலாம்.




TAFCOP இணையதளத்திற்குள் செல்வதும் மிக சுலபம். உங்களின் மொபைல் நம்பரை முதலில் டைப் செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள Capche வையும் டைப் செய்து, Verify என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும், உடனடியாக நீங்கள் மேலே குறிப்பிட்ட உங்கள் மொபைல் நம்பருக்கு otp வரும். அதை அந்த கட்டத்தில் பதிவிட்டதும், login ஆகி விடும். மத்திய தொலைத்தொடர்பு துறை இணையதள பக்கத்தில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்தாலே அதை எப்படி பயன்படுத்த வேண்டும், அதற்கு உங்களிடம் தேவையான விபரங்கள் என்ன இருக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் மிக எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது.


பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும் இந்த இணையதளத்தில் IMEI எண்ணை பதிவிட்டு, வேண்டிய விபரங்களை அளித்தால் தொலைந்து போன அல்லது திருடு போன உங்களின் மொபைல்  போன் குறித்த விபரம் வந்து விடும். இந்த இணையதளம் மூலம் இதுவரை லட்சக்கணக்கான தொலைந்த மொபைல்கள் மீட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


2023ம் ஆண்டு இந்திய தொலைத்தொடர்பு சட்டத்தின்படி தனிநபர் ஒருவர் 9 சிம் கார்டுகள் வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் சிம் கார்டு கார்டு பயன்படுத்தினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். அதனால் உங்கள் பெயரில் 9 சிம் கார்டிற்கு மேல் இருந்தால் உடனடியாக  TAFCOP இணையதளத்திற்கு சென்று சரிபார்த்து, தேவையில்லாத எண்களை நீக்கி விடுங்கள். இதுவும் மிகவும் எளிது தான்.


உங்கள் பெயரில் இருக்கும் ஒரு மொபைல் நம்பரை பயன்படுத்தி TAFCOP இணையதளத்தில் login செய்தாலே போதும், உங்கள் பெயரில் இருக்கும் மொத்த மொபைல் எண்களின் பட்டியலும் வந்து விடும். அதில், this is not my number, not required, required என மூன்று option காட்டப்படும். உங்களுக்கு தேவை இல்லாத நம்பரை தேர்வு செய்து, தேவையில்லை என்பதை தேர்வு செய்து, அதில் வரும் நிபந்தனையை படித்து ஓகே அளித்தாலே, அது உங்கள் பெயரில் இருந்து நீக்கப்பட்டு விடும்.

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்