TNPSC: மக்களே இதைப் படிங்க முதல்ல..  குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Mar 28, 2024,05:59 PM IST

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் குரூப் 1  தேர்வு தேதி குறித்த அறிவிப்பும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 வரை குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. இன்று முதல் ஏப்ரல் 27ம் தேதி இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஏப்ரல் 2 முதல் 4ஆம் தேதி இரவு 11.59 வரை நேரம் அளிக்கப்பட்டுள்ளது.




90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு அட்டவணை டிஎன் பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். பணியிடங்களுக்கு முதல் நிலை, முதன்மை நேர்முக தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று முதல் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வு வரும் ஜூலை 13ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இத்தேர்வு குறித்த விபரங்களை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளங்களை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்