யூடியூபர் சவுக்கு சங்கரை.. அழைத்துச் சென்ற.. போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது!

May 04, 2024,12:16 PM IST

கோயம்புத்தூர்:  பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இருப்பினும் யாருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை.


போலீஸ் அதிகாரிகளையும், பெண்களையும், சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக கூறி சவுக்கு சங்கர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது.  இதையடுத்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து  கோவை சைபர் கிரைம் போலீசார் இன்று காலை கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு வாகன மூலம் அழைத்துச் சென்றனர். 




போலீஸ் வாகனம் தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளானது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த போலீஸார் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு மாற்று வாகனத்தில் மீண்டும் கோவைக்குப் பயணமானார்கள்.


கோவை  கொண்டு செல்லப்பட்ட சவுக்கு சங்கரிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது. அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்