சின்னவங்க பெரியவங்க வயசு வித்தியாசம் பார்க்காம மதித்தவர் விஜயகாந்த்.. யோகிபாபு

Dec 28, 2023,06:17 PM IST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு தொடர்ந்து திரைத் துறையினர், பல்துறைப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.


அவரது மறைவு குறித்து நடிகர் யோகிபாபு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ:




இன்றைக்கு நமது கேப்டன் புரட்சி தலைவர் விஜயகாந்த சார் நம்மள விட்டு பிரிஞ்சுட்டாரு. பிரிந்தாலும் அவரு பண்ணிய புண்ணியம், தான தருமங்கள் இந்த பூமியில் நிலைச்சு தான் இருக்கும். ஏன்னா அவ்வளவு நல்லது செய்திருக்காரு. நிறைய நல்ல விசயங்களை கத்துக் கொடுத்தாரு, ரொம்ப நல்லவர். நல்ல உள்ளம் படைத்தவர். அவருடைய இறுதி ஊர்வலத்தில் என்னால கலந்துக்க முடியல.


அவருடைய ரசிகர்களில் நானும் ஒருத்தன். சின்னவங்க பெரியவங்க என வயசு வித்தியாசம் பார்க்காம எல்லாரையும் மதிச்சவரு. தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.


தலைவாசல் விஜய்


முதலில் அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். விஜயகாந்த் சாதி மதமற்ற மனிதர். வந்தவர்களை சாப்பிட்டீங்களா என கேட்கும் மனிதர். மனிதனுக்கு உதவின்னா உடனே உதவி செய்யக்கூடியவர். நிறைய பேர் அவரை ஏமாத்தி இருக்காங்க. மத்தவங்களுக்கு சாப்பாடு குடுத்து சந்தேசப்பட்டவர். இப்படிப்பட்ட மனிதர்களை பார்க்க முடியாது. ரொம்ப ரொம்ப நல்ல மனிதர்ங்க அவர்.


சிங்கமுத்து 


நல்ல மனிதநேய மிக்க மனிதர். அவரைப் போன்றவர் மீண்டும் வர முடியாது என நடிகர் சிங்கமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.


நடிகை மீனா




விஜயகாந்த் சார் மீண்டு வந்துருவாருனு நினைத்தேன். இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவில்லை. கேப்டன்னு தான் எல்லாரும் கூப்பிடுவோம். லீடர் சிப் குவாலிட்டி அவருக்கு அதிகமாக இருக்கும். நல்ல உன்னதமான மனிதர். எல்லாரும் நல்லா சாப்பிடனும்னு நினைப்பவரு. ஒரு பெரிய சகாப்தத்தை இழந்திருக்கிறோம். ரொம்ப கடின உழைப்பாளி. எல்லா நடிகரு கிட்டயும் நல்ல அழகா பேசி பழகுவாரு. புரடக்சன் பாய் முதற்கொண்டு நல்லா பேசுவாரு.  மனிதர்களை பார்த்து அவங்களுக்கு ஏத்த மாதிரி பேசுவாரு. ஒருத்தரோட கஷ்டத்த அவருக்குள்ள போயி பார்த்து  தீர்த்து வைப்பார் என்று கூறியுள்ளார்.


நடிகை சுகன்யா


கேப்டன் விஜயகாந்த் மறைவு பெரிய இழப்பு. மிகவும் நல்ல குணம் படைத்தவர். விஜயகாந்த் படப்பிடிப்பின் போது அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். யாரிடமும் பாகுபாடு இல்லாமல் இருப்பவர் என நடிகை சுகன்யா உருக்கமாக பேசியுள்ளார்.


அண்ணா மன்னித்து விடுங்கள் - நடிகர் விஷால்


நடிகர் விஷால் இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் வெளிநாட்டில் உள்ளேன்.  மறைந்த விஜயகாந்த் அவர்களின் அருகில் இருக்க முடியவில்லை. என்னை மன்னிச்சுடுங்கண்ணா என்று கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார். 


இயக்குனர் பாரதிராஜா


என் நண்பன். சிறந்த கலைஞர் சிறந்த மனிதாபிமானி. அவர் வீட்டுக்கு சென்று சாப்பிடாமல் வர முடியாது. அவரின் மறைவு பெரிய இழப்பு. என்னால் நடந்து சென்று பார்க்க முடியவில்லை என்ற கவலை இருக்கிறது. திரைத்துறை, அரசியல் இரண்டிலும் விஜயகாந்த் வெற்றி கொடி நாட்டியவர் என புகழ்ந்து பேசியுள்ளார்.


தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு


உதவிக்கரம் நீட்டுவதில் அவருக்கு நிகரானவர் யாருமே இல்லை. என் மீது அளவற்ற பாசம் உடையவர். வாழ்வில் வல்லவனே வசூலில் நல்லவனே தொடரட்டும் உன் தொண்டு வாழ்க நீ பல்லாண்டு. ஆரவாரம். ஆர்பாட்டம், ஆக்ரோசம்னா அது விஜயகாந்த் தான் என்று விஜயகாந்தை புகழ்ந்து கூறியுள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்