மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

Apr 03, 2025,10:18 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்தாம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். தற்போது வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் 6 cm மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அதிகாலை முதலிலேயே ஒரு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. அதேபோல் சென்னையில் பல்லாவரம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பம்மல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  மிதமான மழை பெய்தது.இதனால் வெட்கை சற்று குறைந்து குளுமையான சூழல் நிலவுகிறது. இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


இந்த நிலையில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல்  ஐந்தாம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


இன்று கனமழை:




 நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை,விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


காலை 10 மணிக்குள் மழை பெய்யும் மாவட்டங்கள்: 


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 


நாளை கன மழை: 


நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 


ஏப்ரல் 5ஆம் தேதி கனமழை:


 கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.



மிதமான மழை: 


தமிழகத்தில் இன்று முதல் ஐந்தாம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்