Yearender 2024.. மிகச் சிறந்த வட கிழக்குப் பருவ மழை.. மொத்த தமிழ்நாட்டுக்கும் அள்ளித் தந்த வானம்!

Dec 20, 2024,06:40 PM IST

சென்னை: 2024ம் ஆண்டு மிகச் சிறந்த மழை ஆண்டாக முடியப் போகிறது. ஆம், இந்த வருட வட கிழக்குப் பருவ மழை கிட்டத்தட்ட மொத்தத் தமிழ்நாட்டுக்கும் நல்லதொதரு சீசனாக இருந்துள்ளது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நல்ல மழை கிடைத்துள்ளது இந்த சீசனில்தான்.


2024ம் ஆண்டு முடியப் போகிறது. வழக்கமாக பெரு மழை, புயல் தாக்கம் என முடியும் வருடம் இந்த ஆண்டும் நல்லதொரு மழைக்காலத்துடன் முடியப் போகிறது. 


இந்த வருட வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் 3 புயல்களை வங்கக் கடல் கண்டது. அதில் ஒரு புயல் நமக்கு வரவில்லை. 2வது புயலும் நமக்கு இல்லை. 3வது புயலான ஃபெஞ்சல் புயல்தான் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்து விட்டுச் சென்றது. கிட்டத்தட்ட 10 நாட்களாக வங்கக் கடலில் ஆட்டம் காட்டிய ஃபெஞ்சல் புயலானது தமிழ்நாட்டில் பல மாவட்டங்களை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டது.




2024ம் ஆண்டு வட கிழக்குப் பருவ மழைக்காலம் சென்னை தொடங்கி அந்தப் பக்கம் ராமநாதபுரம், இந்தப் பக்கம் சேலம், தென்கோடி கன்னியாகுமரி வரை  எல்லா மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவைக் கொடுத்துள்ளது.  குறிப்பாக கடலோர மாவட்டங்கள்தான் அதீத மழைப் பொழிவை சந்தித்தன. அதேபோல உள்புற மாவட்டங்களான திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலும் மழை வச்சு செய்து விட்டுப் போனது. இங்கெல்லாம் 500 மில்லி மீட்டர் வரைக்கும் மழைப் பொழிவு இருந்தது.


காவிரி டெல்டா மாவட்டங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அங்கு கன மழை கொட்டித் தீர்த்தது. 


சென்னையானது பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம்தான் அக்டோபர் முதல் டிசம்பர் வரை இடைவிடாத மழைப்பொழிவைச் சந்தித்து நன்கு குளிர்ந்து போயுள்ளது.  1000 மில்லி மீட்டர் மழைப்பொழிவை இந்த ஆண்டு தாண்டியுள்ளது சென்னை. கடந்த 2020ம் ஆண்டிலிருந்தே சென்னையானது தொடர்ந்து நல்ல மழைப் பொழிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


டிசம்பர் மாதம் முடிய இன்னும் 11 நாட்கள் உள்ளது. இன்னும் கொஞ்சம் மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. அவையும் சேரும்போது கூடுதல் சந்தோஷத்தை பூமி அனுபவிக்க முடியும்.


2024ம் ஆண்டு எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருந்தது என்பது குறித்த ஒரு பட்டியலைப் பார்ப்போம்:


மேற்கு மாவட்டங்கள்


கோயம்பத்தூர் - 501.6 மில்லி மீட்டர் - இயல்பை விட 53 சதவீதம் கூடுதல் மழை

திருப்பூர் - 432.1 மில்லி மீட்டர் - 46% கூடுதல்

திண்டுக்கல் - 589.9 மில்லி மீட்டர் - 35% கூடுதல்

தேனி - 397.6 மில்லி மீட்டர் - 13% கூடுதல்

ஈரோடு - 314.5 மில்லி மீட்டர் - 6% கூடுதல்


காவிரி டெல்டா - மத்திய கடலோர மாவட்டங்கள்


புதுக்கோட்டை - 530 மில்லி மீட்டர் -  45% கூடுதல்

நாகப்பட்டனம் - 1161.1 மில்லி மீட்டர் - 35% கூடுதல்

தஞ்சாவூர் - 725.4 மில்லி மீட்டர் - 34% கூடுதல்

அரியலூர் - 599.8 மில்லி மீட்டர் - 27% கூடுதல்

திருவாரூர் - 832.7 மில்லி மீட்டர் - 23% கூடுதல்

மயிலாடுதுறை - 915.1 மில்லி மீட்டர் - 11% கூடுதல்

காரைக்கால் - 1345.1 மில்லி மீட்டர் - 43% கூடுதல்


உட்புற தமிழ்நாடு




திருப்பத்தூர் - 485 மில்லி மீட்டர் - 89% கூடுதல்

கிருஷ்ணகிரி - 495.5 மில்லி மீட்டர் - 82% கூடுதல்

தர்மபுரி - 490.3 மில்லி மீட்டர் - 60% கூடுதல்

சேலம் - 516.5 மில்லி மீட்டர் - 60% கூடுதல்

திருவண்ணாமலை - 646 மில்லி மீட்டர் - 51% கூடுதல்

கள்ளக்குறிச்சி - 623.2 மில்லி மீட்டர் - 45% கூடுதல்

நாமக்கல் - 377.6 மில்லி மீட்டர் - 44% கூடுதல்

திருச்சி - 499.5 மில்லி மீட்டர் - 38% கூடுதல்

கரூர் - 399.5 மில்லி மீட்டர் - 33% கூடுதல்

வேலூர் - 474 மில்லி மீட்டர் - 32% கூடுதல்

பெரம்பலூர் - 464 மில்லி மீட்டர் - 12 % கூடுதல்


தென் மாவட்டங்கள்


திருநெல்வேலி - 792.2 மில்லி மீட்டர் - 64% கூடுதல்

சிவகங்கை - 589 மில்லி மீட்டர் - 47% கூடுதல்

மதுரை - 502 மில்லி மீட்டர் - 42% கூடுதல்

ராமநாதபுரம் - 643 மில்லி மீட்டர் - 29% கூடுதல்

தென்காசி - 558 மில்லி மீட்டர் - 25% கூடுதல்

விருதுநகர் - 432 மில்லி மீட்டர் - 13% கூடுதல்

கன்னியாகுமரி - 532 மில்லி மீட்டர் - 3% கூடுதல்

தூத்துக்குடி - 400 மில்லி மீட்டர் - 5% குறைவு


வடக்கு மற்றும் வட கடலோர மாவட்டங்கள்


விழுப்புரம் - 856.5 மில்லி மீட்டர் - 70% கூடுதல்

ராணிப்பேட்டை - 566 மில்லி மீட்டர் - 46% கூடுதல்

சென்னை - 1021 மில்லி மீட்டர் - 33% கூடுதல்

திருவள்ளூர் - 789 மில்லி மீட்டர் - 33% கூடுதல்

கடலூர் - 765 மில்லி மீட்டர் - 16% கூடுதல்

காஞ்சிபுரம் - 611 மில்லி மீட்டர் - 8% கூடுதல்

புதுச்சேரி - 850 மில்லி மீட்டர் - 7% கூடுதல்

செங்கல்பட்டு - 699 மில்லி மீட்டர் - 3% கூடுதல்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குமரி முனை திருவள்ளுவர் சிலையை.. Statue Of Wisdom ஆக கொண்டாடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

வெளியில் நடமாடவே அச்சப்பட்டார்களே.. மறந்து விட்டீர்களா எடப்பாடி பழனிச்சாமி.. அமைச்சர் எஸ். ரகுபதி

news

நான் உயிருடன் இருக்கும் வரை நடக்க விடமாட்டேன்.. எண்ணூர் கருத்துக் கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்

news

நெல்லை கோர்ட் வாசலில் வைத்துக் கொலை.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

news

2025ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையின்.. முதல் கூட்டத் தொடர்.. ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ல் நடைபெறும்!

news

Yearender 2024.. மிகச் சிறந்த வட கிழக்குப் பருவ மழை.. மொத்த தமிழ்நாட்டுக்கும் அள்ளித் தந்த வானம்!

news

ஈரோட்டில் விரைவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

பொங்கல் நாளையே.. மத்திய அரசின் தேர்வு முகமைகள் குறி வைப்பது ஏன்.. சு. வெங்கடேசன் கேள்வி

news

அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சு.. இன்றும் நாடாளுமன்றத்தில் போராட்டம், அமளி.. ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்