புஷ்பா 2.. 2024ம் ஆண்டின் பிளாக் பஸ்டர் படம்.. 6 நாட்களில் 1000 கோடியைத் தாண்டுகிறது.. புது சாதனை!

Dec 11, 2024,02:58 PM IST

சென்னை: இந்த வருடத்தின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாகவும், இந்திய சினிமாவில் பிரமாண்டமான வெற்றிப் படமாகவும் புஷ்பா 2 மாறி உள்ளது. 6 நாட்களில் மட்டும் 1000 கோடி ரூபாய் தாண்டி வசூலில் சாதனை படைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது.


2021ம் ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தின் தொடர்ச்சியாக தான் தற்பொழுது புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்துள்ளது.  சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2. இந்த படம் கடந்த 5ம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. செம்மரக் கடத்தலை மையப்படுத்தி இந்த படத்தின் மையக்கரு அமைந்துள்ள நிலையில், இப்படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் இப்படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸாகவே வந்து கொண்டு இருக்கின்றனர்.




புஷ்பா 2 முதல் நாள் மட்டும் ரூ.265 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இரண்டாவது நாளில் 449  கோடிகளும், 3வது நாளில் 621 கோடிகளும், 4வது நளில் 829 கோடிகளும், 5வது நாளில் 922 கோடிகளும் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசூல் இந்திய சினிமாவில் வேறு எந்த படத்திற்கும் இல்லாத வசூலாகும். வேறு எந்த படத்திற்கும் இந்த அளவிற்கு வசூலிக்க வில்லை என்றே சொல்லலாம். 


முதல் நாளில் இருந்த இந்த படத்திற்கு வசூல் சாதனை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமுமே ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிவேகமாக 6 நாட்களில் 1000 கோடிகளை அள்ளிய படமாக புஷ்பா 2 இருந்து வருகிறது.


புஷ்பா 2 ஓடும் திரையரங்கங்களில் கூட்டமும் குறைந்த பாடில்லை என்பதால், விரைவில் இப்படம் 2000 கோடிகளை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 படத்தின் வசூல், ஆர்ஆர்ஆர், கல்கி 2898AD,பாகுபலி, கேஜிஎஃப் ஆகிய படங்களின் வசூலினை விரைவில் முறியடித்து இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக உருவாகும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tirunvannamalai Deepam 2024.. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு தடை!

news

திருவண்ணாமலை தீபம் 2024.. தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 3 நாட்கள் சிறப்பு ரயில்கள்!

news

Yearender 2024.. கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் எவை தெரியுமா?.. இந்தாங்க லிஸ்ட்!

news

Yearender 2024: இந்தியர்கள் விழுந்து விழுந்து எதைத் தேடிப் பார்த்திருக்கிறார்கள் பாருங்க!

news

தப்புத்தான்.. இனிமே வடிவேலு பத்தி அவதூறாக பேச மாட்டேன்.. கோர்ட்டில் உறுதி அளித்த சிங்கமுத்து!

news

புஷ்பா 2.. 2024ம் ஆண்டின் பிளாக் பஸ்டர் படம்.. 6 நாட்களில் 1000 கோடியைத் தாண்டுகிறது.. புது சாதனை!

news

மழை அப்டேட்: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை.. 11 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு!

news

Proverbs: உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.. உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!

news

பைக் டாக்ஸிகள் இயங்கலாம்.. ஆனால் விதி மீறலை அனுமதிக்க முடியாது.. போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர்

அதிகம் பார்க்கும் செய்திகள்