அழகிய பேயாய்.. யாஷிகா ஆனந்த்.. திரில்லாகி பயப்பட நீங்க ரெடியா.. நாளை முதல்!

Nov 16, 2023,05:04 PM IST

சென்னை: அழகான ராட்சசியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், பேயாய் நடித்தால் எப்படி இருக்கும்.. செமையா இருக்குல்ல.. கேட்கவே.. நாளைக்கு திரைக்கு வருகிறது, யாஷிகா பேயாய் நடித்துள்ள சைத்ரா படம்.


இது ஒரு திரில்லர் கலந்த ஹாரர் படமாகும். யாஷிகா ஆனந்த் இதில் பேயாய் நடித்துள்ளாராம். பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதேசமயம் பல படங்களிலும் சிறு சிறு ரோல்களில் நடித்துள்ளார்.




துருவங்கள் பதினாறு, கடமையை செய் போன்ற ஒருசில படத்தில் நடித்துள்ளார்.  இவர் நடித்துள்ள புதிய படம்தான் சைத்ரா. பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக இருந்த ஜெனித்குமார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை  கே. மனோகரன் தயாரித்துள்ளார்.


யாஷிகா ஆனந்த் ( சைத்ரா ) அவிதேஜ் ( கதிர் ) சக்தி மகேந்திரா ( திவ்யா ), பூஜா ( மதுமிதா ) கண்ணன் ( இன்ஸ்பெக்டர் ), ரமணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை  பிரபாகரன் மெய்யப்பன். இப்படத்திற்கு ஒளிப்பதிவு சதீஷ் குமார் செய்துள்ளார். 




இப்படத்தின் போஸ்டர் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. நவம்பர் 17ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.




அழகிய தீயாய் வலம் வரும் யாஷிகாவை அழகிய பேயாய் பார்க்க தயாராகுங்கள்!

சமீபத்திய செய்திகள்

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தங்கம் விலையில் மாற்றமில்லை.... நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்