என்னாது... இந்தியாவின் உலகக் கோப்பை கிரிக்கெட் வெற்றியை கொண்டாட கம்பெனிக்கு லீவா?

Jul 01, 2024,01:27 PM IST

டில்லி : ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடுவதற்காக பிரபல ஐடி நிறுவனம் எக்ஸ்பினோ தனது ஊழியர்களுக்கு இன்று விடுமுறை வழங்குவதாக அறிவித்துள்ளது.


உலகக்கோப்பை டு20 கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது. இதன் இறுதிப் போட்டி ஜூன் 29ம் தேதி நடைபெற்றது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியிலில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. கிட்டதட்ட 17 ஆண்டு இடைவெளிக்கு பிறகு உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றி உள்ளது. இதற்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




இந்நிலையில் பெங்களூருவில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான Xpheno, உலகக் கோப்பையில் இந்தியா பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக ஜூலை 01ம் தேதியான இன்று விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் லிங்க்டுஇன் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், "வழக்கமாக மாதத்தின் முதல் நாள் கணக்கு முடிப்பது, சம்பளம் போடுவது என நாம் பிஸியாக இருப்போம். ஆனால் இந்திய அணி அளித்த மாபெரும் முயற்சி, உழைப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாளை விடுமுறை நாளாக அறிவிக்கிறோம். இது நமக்கு ஆச்சரியம் மட்டுமின்றி, இது ஸ்பெஷலான நாளாகும் ஆகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டித் தொடர் ஜூன் 01ம் தேதி துவங்கி, ஜூன் 29ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெற்றது. இதனை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகியன இணைந்து நடத்தின. பரபரப்பு, விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்த இந்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்திய அணி வெற்றி பெற்று, உலகக் கோப்பையை கைப்பற்றியதற்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோ சாஃப்ட் சிஇஓ சத்ய நடெல்லா, பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா உள்ளிட்ட பல ஐடி நிறுவன தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு பிசிசிஐ, இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றியை இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் என பலரும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்