நீங்க யாரை வேணும்னாலும் Like பண்ணுங்க.. நாங்க வெளில காட்ட மாட்டோம்.. Xல் அடுத்த அதிரடி!

Jun 13, 2024,06:11 PM IST

டெல்லி: எக்ஸ் தளத்தில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளார்கள். அதாவது நாம் யாருடைய போஸ்ட்டையாவது லைக் செய்தால் அதேசமயம், அது வெளியே தெரியக் கூடாது என்றால் அதை பிரைவேட் லைக் ஆக மாற்றிக் கொள்ளலாம். அப்படிச் செய்யும்போது நாம் செய்யும் லைக் வெளியில் தெரியாது. 


இந்த லைக்கை மறைக்கும் வசதி ஏற்கனவே எக்ஸ் தளத்தின் ப்ரீமியம் சப்ஸ்கிரைபர்களுக்கு உள்ளது.  தற்போது அனைவருக்குமே இதை டிஃபால்ட் ஆக்கி விட்டார்கள். இதனால் யாருக்காவது நீங்கள் லைக் கொடுத்தால் அது வெளியே தெரியாது. இதுகுறித்து எலான் மஸ்க் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில், நாம் யாருக்காவது லைக் செய்தால், அப்படி செய்ததற்காகவே, நாம் சிக்கலுக்குள்ளாகும் தர்மசங்கட நிலையைத் தவிர்க்க மக்களுக்கு இதுபோன்ற வசதி செய்து தர வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.




சில வாரங்களுக்கு முன்புதான் இந்த மாற்றம் குறித்து எக்ஸ் தளத்தின் என்ஜீனியரிங் பிரிவு இயக்குநர் ஹபோய் வாங்க் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், பயனாளர்கள் பலரும், லைக் செய்த காரணத்தாலேயே டிரோல் செய்யப்படுவதும், அவர்களுக்கு எதிராக விஷமத்தனமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதையும் நாங்கள் அறிந்தோம். இதை சரி செய்யவே இந்த புதிய மாற்றம் வந்துள்ளது. நாம் யாருடைய போஸ்ட்டை லைக் செய்தோம் என்பதை நாம் பார்க்க முடியும். அதேசமயம், நாம் லைக் செய்ததை மற்றவர்கள் பார்க்க முடியாது என்றார் அவர்.


டிவிட்டர் தளத்தை வாங்கியது முதலே பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க். இது பல நேரங்களில் சர்ச்சையைக் கிளப்பினாலும் கூட அது பின்னர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இந்த நிலையில் இந்த லைக்கை மறைக்கும் வசதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இனிமேல் சுதந்திரமாக நமக்குப் பிடித்த டிவீட்டுகளை லைக் செய்யலாம்.. நாம் லைக் செய்வதை யாராலும் பார்க்க முடியாது, தேவையில்லாத டிரோல்களையும் தவிர்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்