மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆன விருத்திமான் சஹா, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளிலும் ஆடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார் சஹா.
தற்போது ரஞ்சிப் போட்டிகளில் ஆடி வருகிறார் சஹா. இதுவே தான் கலந்து கொள்ளும் கடைசி கிரிக்கெட் தொடர் என்று அவர் அறிவித்துள்ளார். கடந்த மாதம்தான் 40 வயதை எட்டினார் சஹா. இந்தியாவுக்காக இவர் பெரிய அளவில் விளையாடவில்லை, வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 40 டெஸ்ட் போட்டிகளிலும் 9 ஒருநாள் போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ளார். யாருக்காவது காயம் என்றால்தான் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
அதேசமயம், தோனி ஓய்வு பெற்ற பின்னர் இவருக்கு தொடர்ச்சியாக சில போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டிகளிலும் கூட இவர் சில சாதனைகளைச் செய்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்களிலேயே அதிக டெஸ்ட் சதம் அடித்த 2வது வீரராக தோனி, ரிஷாப் பந்த்துக்குக்கு அடுத்த இடத்தில் சஹா உள்ளார். 3 சதங்களை அவர் டெஸ்ட் போட்டிகளில் விளாசியுள்ளார்.
2021ம் ஆண்டு கடைசியாக தனது டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார் சஹா. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி அது. அந்தத் தொடரில் சஹா நன்றாகவே ஆடியிருந்தார். ஆனாலும் அவரது வயதை கருத்தில் கொண்டு படிப்படியாக அவரை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு கே.எஸ். பரத், ரிஷாப் பந்த் ஆகியோரை அதிகம் பயன்படுத்த அப்போதைய கோச் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் முடிவெடுத்ததால் சஹாவின் சகாப்தம் அப்படியே முடிவுக்கு வந்தது.
சஹா ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து விளையாடி வந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் விளையாடியயுள்ள சஹா, கடைசியாக விளையாடியது குஜராத் டைட்டன்ஸ் அணியில்தான். கடந்த 3 வருடமாக அதில் விளையாடி வந்த சஹாவை அந்த அணி தற்போது ரீட்டெயன் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் சஹா விளையாடப் போவதில்லை. தனது பெயரை அவர் வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்யவில்லை. இதனால் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லியுள்ளார் விருத்திமான் சஹா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வட கிழக்குப் பருவ மழை.. 1871ம் ஆண்டுக்குப் பிறகு.. 3வது முறையாக நீண்ட நாள் நீடித்த பருவ மழை!
மகா கும்பமேளா 2025 : எகிறும் விமான டிக்கெட் கட்டணம்... 600% லாபம் பார்த்த விமான நிறுவனங்கள்
TN BJP president Race: தமிழ்நாட்டு பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் இவரும் இருக்கிறாரா?
100 நாள் வேலை நிலுவைத் தொகை.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
தைப்பூசத்தையொட்டி.. பழனி முருகன் கோயிலில் 3 நாட்களுக்கு கட்டணமில்லா தரிசனம்.. அமைச்சர் சேகர்பாபு
உத்தரகாண்ட் மாநிலத்தில்.. பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது.. இன்று முதல்!
நெடுஞ்சாலைகள்,பொது இடங்களில் அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள்.. அமைக்க.. ஹைகோர்ட் தடை!
பெற்றோர்களே.. குட்டீஸ்கள் சாப்பிடும் போது கவனம்.. கேரட் தொண்டையில் சிக்கி சிறுமி மரணம்!
மறக்க முடியாத மழை நினைவுகளுடன்.. விடைபெற்ற வட கிழக்குப் பருவமழை.. அடுத்து வெயிலுக்கு காத்திருப்போம்!
{{comments.comment}}