நான் தோற்று விட்டேன்.. இனி வலிமை இல்லை.. வலியுடன் ஓய்வை அறிவித்தார்.. வீராங்கனை வினேஷ் போகத்!

Aug 08, 2024,10:45 AM IST

புதுடெல்லி:   உடல் எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இனியும் என்னால் போராட வலிமை இல்லை. அனைவரும் மன்னியுங்கள் என்று கூறி தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்.


33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரான பாரிசில்  நடைபெற்று வருகிறது. இதில் 206 நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் நேற்று முன்தினம் இந்தியாவின் சார்பில் வினேஷ் போகத் களம் இறங்கினார். அப்போது 16 பேர் கொண்ட நாக் அவுட் சுற்று, கால் இறுதி மற்றும் அரை இறுதி ஆகிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இந்த இறுதி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. 


அதற்கு முன்னதாக  வினேஷ் போகத்தின் உடல் எடை 2 கிலோ கூடுதலாக இருந்ததால், நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து எடையைக் குறைக்க முயற்சித்தார். ஆனாலும் கடைசியில் 100 கிராம் எடையை குறைக்க முடியாமல் போனது. இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.




இரவு முழுவதும் தூங்காமல், சாப்பிடாமல் உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார். இருந்தாலும் கூட அவரது எடை 50 கிலோ 100 கிராம் ஆக இருந்தது. டாக்டர்களின் அறிவுரைப்படி தனது நீளமான முடியை கூட வெட்டி தியாகம் செய்தார். அப்படியும் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது அத்தனை உழைப்பும் வீணாகிப் போனது. இதனால் வினேஷ் போகத் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி ஏமாற்றத்தில் திகைத்து நின்றார். இரவு முழுவதும் ஓய்வு இல்லாமல் கடுமையாக உடற்பயிற்சி செய்ததால் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடும் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


வினேஷ் போகத்துக்கு  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஆறுதலும், தைரியமும் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிண்ணனியில் சதி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகளை முன் வைத்துள்ளனர். அவருக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்பினர், இயக்கங்கள், தனிநபர் என ஆதரவு குவிந்த  நிலையில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தம் போட்டிகளில் இருந்து முற்றிலும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார். 


வினேஷ் போகத்தின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அம்மா, நான் தோற்றுவிட்டேன். மல்யுத்தம் என்னை வென்று விட்டது. என் தைரியம், கனவுகள் எல்லாம் உடைந்து விட்டன. எனக்கு இப்போது வலிமை இல்லை. குட்பை மல்யுத்தம் 2001-2024.  உங்கள் அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருப்பேன், மன்னியுங்கள் என பதிவிட்டுள்ளார்.


இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் புகார்களை கூறிய வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராடியவர் வினேஷ் போகத் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான போராட்டத்துக்கு மத்தியில்தான் அவருக்கு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவே அனுமதி கிடைத்தது.  அப்படி கிடைத்தும் கூட தனது மனோ திடத்தால் அதிரடியாக விளையாடி பதக்கத்தக்கு அருகே வரை வந்தார் வினேஷ் போகத். ஆனால் 100 கிராம் எடை அவரது கனவை சீர்குலைத்து விட்டது பெரும் வேதனையாக இருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

பெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.2000 நிவாரணம் .. முதல்வர் ஸ்டாலின்

news

உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியுள்ளனர்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு புகார்

news

சாத்தனூர் அணை திறப்பு.. குறை கூறும் அதி மேதாவிகளே இதைப் படிங்க.. துரைமுருகன் விரிவான அறிக்கை!

news

சாத்தனூர் அணை விவகாரம் .. தமிழ்நாடு அரசுக்கு.. டாக்டர் அன்புமணி ராமதாஸின் 7 கேள்விகள்!

news

புயல் பாதித்த குடும்பங்களை.. தவெக அலுவலகத்திற்கு அழைத்து வந்து.. உதவிகள் வழங்கிய விஜய்

news

Cooking Tips.. இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையான .. கடாய் காளான் கிரேவி!

news

அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதே பாதிப்பிற்கு காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட.. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல்!

news

கருத்து சுதந்திரம்.. சினிமா விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது... சென்னை ஹைகோர்ட் அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்