World Water Day: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Mar 22, 2025,04:54 PM IST

தேவகோட்டை : உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கவிதை,குழு பாடல்,பேச்சு மூலமாக தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


 உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற   நிகழ்ச்சியில் ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார தோட்டக்கலை அலுவலர் ஜோமி     மாணவர்களிடம் பேசுகையில்,மனித வாழ்வில் நாம் அன்றாட தேவைகள் அனைத்திற்கும் நீர் தேவைப்படுகிறது. 



தண்ணீரே இல்லை என்றால் நாம் அன்றாட தேவைகள் அனைத்தும் பாதிக்கப்படும். நாம் சாப்பிடுவதே கஷ்டமாகிவிடும். கேப்டவுனில் இருக்கும் சகோதர, சகோதரிகள் தண்ணீர் கொஞ்சம்கூட இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நமக்கும் அந்த நிலை வருவதற்கு நாம் தண்ணீரை சேமிக்க வேண்டும். நம்முடைய தலைமுறையினருக்கு சொத்துக்களை சேர்த்து வைக்காவிட்டாலும்,  நாம் தண்ணீரை சேமித்து வைக்கவேண்டும். 


தண்ணீர் நமக்கு எளிதாக கிடைப்பது என்றால் நமக்கு அதன் அருமை தெரிவதில்லை. தண்ணீர் இல்லாமல் இருந்தால் தான் நமக்கு அதன் அருமை புரியும். 1993 ஆம் ஆண்டு உலக தண்ணீர் தினம் கொண்டாடுவது ஆரம்பிக்கப்பட்டது. பூமியானது 71% நீரினாலும், 29% நிலத்தினாலும் ஆனது . 100% நீரில் 97.5 சதவீதம் நீர் கடல் நீரினால் சூழப்பட்டுள்ளது. மீதமுள்ள 2.5% நீர் நம்முடைய அன்றாடத் தேவைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுகிறது.





2.5 சதவீதம் நீரில் 1.9 சதவீதம் நீர் உயர்ந்த சுத்தமான தண்ணீர்  எங்கு கிடைக்கிறது என்றால் பணி பாறைகளில் தான். குளம், குட்டை ஏரிகளில் கிடைப்பது 0.02%. தண்ணீர் மட்டுமே. அதுவே நம்முடைய தேவைகள் அனைத்திற்கும் பயன்படுகிறது. இதற்காகவே நாம் நன்றி சொல்ல வேண்டும். பூமிக்கு அடியில் உள்ள நீர் 0.5% வளிமண்டலத்தில் உள்ள  ஈரப்பதத்தில்0.0001% கிடைக்கிறது. 


நாம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் நீர் பூமிக்கு உள்ளே செல்ல முடியாமல் பிளாஸ்டிக் பை தடுக்கிறது. போன வருடம் தண்ணீர் தினத்தின் ஒரு தீம் சமாதானத்திற்கான தண்ணீர் என்பதாகும். இந்த வருடத்தின் தீம் பனி பாறைகளை  பாதுகாப்பது. புவி வெப்பமடைதல் பனிப்பாறைகள் உருகி விடும். இதனால் வெள்ளம் வந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள். 




புவி வெப்பமடைதல் அதிகமானால் எல்லையில் உள்ள வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். அங்கு வாழும் மக்கள் இடம் பெயர வேண்டும். பனிச்சரிவு, நிலச்சரிவு, வெள்ளம் போன்றவை ஏற்படும்.


நாம் தண்ணீரை சேமிப்பதற்கு முக்கியமான வழி என்னவென்றால் மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும். மரங்களை அதிகமாக வளர்த்தால் மண்ணரிப்பைத் தடுக்கும். மழைநீரை சேமித்து வைக்கும் பணத்தினால் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் முக்கியமானது என்னவென்றால் மண் அரிப்பைத் தடுத்து நீரை வேகமாக உறிஞ்சி பூமிக்கு அனுப்பும். விவசாயங்களில்  வயல் வரப்பை வெட்டி தண்ணீரை விடுவதற்குப் பதிலாக சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.



தேவையற்ற செடிகள் வளருவது தடுக்கப்படும். மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து நாம் தண்ணீரை சேமிக்கலாம் . நாம் ஒவ்வொருவரும் நம்முடைய அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். காடுகளை அழிக்கக் கூடாது. மரங்கள் இருந்தால்தான் மண்ணரிப்பு தடுக்கப்படும் என்று பேசினார். 


மேலும், தண்ணீர் சேமிப்பு தொடர்பாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்  விஜய் கண்ணன், ஹாசினி, ரித்திகா, நந்தனா, முகல்யா, ஜாய்  லின்சிகா, ஜெபிகா , நவீன், சுபிக்ஷன், ஹனிஸ்கா    ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினார். நிறைவாக  ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்