World Tourism Day: குவார்ட்டர்லி லீவு விட்டாச்சு.. அப்படியே கிளம்பி போய்ட்டு வரலாம்ல!

Sep 27, 2023,12:37 PM IST

- மீனா


ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினமாக அனுசரிக்கப்படுகிறது.. சுற்றுலா செல்வது என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல  பெரியவர்களுக்கும்  கூட ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான். சுற்றுலா என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் மனிதன் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தான் வசிக்கும் சொந்த வாழ்விடங்களில் இருந்து வெளியிடங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள இயற்கை சூழலை ரசிக்கவும் புதிய விஷயங்களை தேடி சென்று பார்க்கவும் தனது வாழ்நாளில் ஒரு பகுதியை செலவழிப்பதே சுற்றுலா என்கிறோம். 


இது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் வேலைகளை உருவாக்குவதற்கும் பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதற்கும் உதவுகிறது. மக்கள் பல்வேறு கலாச்சாரங்களை அனுபவிக்கவும், புதிய இடங்களை ஆராயவும் வரலாற்றை பற்றி அறிந்து கொள்ளவும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தொடர்பு கொள்ள வாய்ப்பு இல்லாத அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைப்பதன் மூலம் சமூகங்களுக்கு இடையே பாலங்களை உருவாக்க சுற்றுலா உதவுகிறது.




சுற்றுலா பயணிகள் ஒரு  இடத்திற்கு செல்லும் போது உணவு, தங்குமிடம், பொழுதுபோக்கு மற்றும் பிற சேவைகளுக்கு பணம் செலவிடுவதால் உள்ளூர்  வணிகங்களுக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை சுற்றுலா வழங்கி, அவர்கள் வாழ்வாதாரத்திற்க்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது. இன்று மனித வாழ்வு வெகுவாக மாறிவிட்டது. அதிகளவான பணத்தின் பின்னால் பின்னால் ஓட வேண்டிய சூழ்நிலை உள்ளது. வாழ்க்கையில் சுமைகள் சோகங்கள் என பல அழுத்தங்களோடு மனிதன் ஓடிக் கொண்டிருப்பதால் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு விரக்தியை ஏற்படுத்தக் கூடும்.


இதனால்தான் இந்த அழுத்தங்களில் இருந்து விடுபட ஒரு மருந்தாக மனிதனுக்கு அமைகிறது என்பதில் துளி அளவும் ஐயமில்லை. இந்த காரணத்தினால் தான் உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வதை விரும்புகிறார்கள்.


சுற்றுலாவின் வகைகள்


சுற்றுலா என்பது பல வகையாக பிரிக்கப்படுகிறது. அது எந்த தேவைக்காக நாம் சுற்றுலா செல்கிறோமோ என்பதை பொறுத்தது. எடுத்துக்காட்டாக கல்வி சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, விழிப்புணர்வு சுற்றுலா இவ்வாறு பல வகைகள் உள்ளன.


மனிதன் தன்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், தன் குடும்பத்திற்கான நேரத்தை செலவிடவும் சுற்றுலா ஒரு சிறந்த வழிமுறையாகும்.


அப்றம் என்னங்க.. குவார்ட்டர்லி லீவு விட்டுச்சா.. அப்படியே கிளம்பி ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வர வேண்டியதுதானே..!

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்