சென்னை: சென்னையில் உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பின் ஐம்பெரும் விழா வருகிற ஜனவரி மாதம் 6 மற்றும் 7 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு எதிர்வரும் ஆண்டு பத்தாம் ஆண்டு என்பதால் ஐம்பெரும் விழாவாக நடைபெற உள்ளது. அவ்விழாவில் கலை, கலாச்சாரம், பாரம்பரிய உணவு, உடை போன்ற நிகழ்வுகளும் தமிழ் மொழியின் மேன்மைகளையும் பண்டைய கால தமிழரின் வரலாறுகளையும் பிரதிபலிக்கும் விதமாக இந்நிகழ்வு அமைய உள்ளது.
தமிழர்கள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதற்காக சிறு மற்றும் குறுந்தொழில் அதிபர்களை ஒன்றிணைக்கும் விதமாக சந்திப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் உள்ள சிறு குறுந்தொழில் அதிபர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தவும், சந்தைப்படுத்தும் விதமாக அமைய உள்ளது.
தமிழ்மொழி அயல்நாடுகளில் சென்றடைய சினிமா ஒரு பாலமாக இருப்பதால், இவ்வாண்டு கலைஞரின் நூற்றாண்டு விழா என்பதாலும், கலைஞரும் சினிமாவும் என்ற நிகழ்வும் நடைபெற உள்ளது.
தமிழர்கள் உழவுத் திருநாளை எப்படி கொண்டாடுகிறார்கள் என்ற நேரடி காட்சிகளை உலகத் தமிழர்கள் அறியும் வகையில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் பங்கு பெறும் உழவர் திருநாள் விழாவும், பண்டைய காலங்களில் மறந்து போன வீர விளையாட்டுகளும், அறிவுசார் விளையாட்டுகளையும் காட்சிப்படுத்தும் விதமாக நிகழ்வு நடைபெற உள்ளது.
இவ்விழா தமிழர்களின் பெருமைகளை உலகறிய செய்யவும் பறைசாற்றும் விதமாக நிகழ்ச்சியை நடத்த உள்ளோம் என உலகத்தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
விழாவில் பல்வேறு நாட்டு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநில மத்திய அமைச்சர்கள் மேயர்கள் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் சாதனை புரிந்த தமிழர்களுக்கு "சாதனைத் தமிழன்" விருதும், தமிழ் மொழியை போற்றி காக்கும் வகையில் மொழியின் பெருமைகளை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசான் விருதும், கடல் கடந்து சென்று வாழும் தமிழர்களுக்கு "தலை நிமிர்ந்த தமிழன்" விருதும் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்விற்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது என செல்வகுமார் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு +60166167708 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}