- மீனா
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14ஆம் தேதி உலக தர நிர்ணய தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு பொருளை தயாரிப்பதை காட்டிலும் அதன் தரத்தின் அவசியத்தையும் மற்றும் உலக பொருளாதாரத்திற்கு அதன் மதிப்பின் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் உருவாக்கப்பட்டது.
இந்த நாளில் எலக்ட்ரோ டெக்னிக்கல் கமிஷன்(IEC) ,சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியம் (ITU), மற்றும் சர்வதேச தரநிலை அமைப்பு (ISO) ஆகியவற்றை உருவாக்க உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான நிபுணர்களின் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த நாள். ஏனென்றால் ஒரு தயாரிப்பு, அதன் செயல்முறை , அது எப்படி செயல்பட வேண்டும், அதன் தொழில்நுட்ப தரம் என்ன என்று , அதை அதன் தயாரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இதன் உள் நோக்கம். ஏனென்றால் அவசரமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எந்த விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த முடியாவிட்டாலும் நாம் பயன்படுத்தும் பொருள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தை நாம் அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
அதே மாதிரி ஒரு நிறுவனம் தயாரிக்கும் பொருளின் தரத்தில் எப்பொழுதும் முன்னேற்ற பாதையிலே செல்ல வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டியது மிக முக்கியம். எந்த பொருளாக இருந்தாலும் அவை தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருப்பது நல்லது. தரம் குறைந்த எந்த பொருட்களாக இருந்தாலும் அதன் செயல்பாடுகள் பிற்காலத்தில் மிகவும் மோசமானதாக மாறிவிடக்கூடும். அதனால் தரம் எப்பொழுதும் முக்கியம் என்பதனையும் நாம் உணர வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு எந்த வித இழப்பும் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் மக்கள் தொகை பெருக்கத்தினால் மக்களின் தேவைகளும் அதிகமாகவே இருப்பதினாலும் அநேக பொருட்களில் போலியானது அசல் பொருளை விட நம்மை கவர்வதற்காகவே இருக்கிறது. அதனால் அசல் எது, போலியானது எது என்று அதில் பயன்படுத்தியிருக்கும் முத்திரையை பார்த்து நாம் தெரிந்து கொள்வது முக்கியம். ஆகவேதான் அனைத்து நாட்டு மக்களுக்கும் பொருந்தக் கூடியதான ஒரு தொழில்நுட்ப தர நிலையாக ISO என்பது மாறி உள்ளது . ஆகையால் இத்தகைய தர நிர்ணயத்தை புரிந்து கொண்ட நிறுவனங்களும் தங்கள் தொழில் வளர்ச்சி அடைய தங்களுடைய பங்களிப்பை விடாமல் கொடுத்து வருகிறது என்பதையும் நாம் மறுக்க முடியாது.
தம் நிறுவனத்தில் உற்பத்தி செய்யும் பொருட்கள் தரமானதாக இருக்கும் பட்சத்தில் எந்நேரமும் மக்களிடம் தடையின்றி கொண்டு சேர்க்கவும் , தரம் ஒன்றுதான் அதை பயன்படுத்தும் மக்களுக்கு நாம் அளிக்கும் நம்பிக்கை என்பதையும் ஒவ்வொரு நிறுவனங்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். தர நிர்ணயம் செய்யும் நிறுவனங்களுக்குள் அதிகப்படியான ஆளுமை திறன் கொண்டவர்கள் மக்களிடையே தரமான பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதில் பாதுகாக்கும் கொள்கைகளை செயல்படுத்தவும் , திருத்தவும் மற்றும் மேம்படுத்தவும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நாமும் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். அரசாங்கத்தினால் அந்தந்த நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு கொடுக்கும் முத்திரையின் காரணமாக அவை தரமானது என்றும் அதனால் உள்ளூர் சந்தைகள் மற்றும் வெளியூர் சந்தைகளுக்கு அவற்றை ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாம் என்பதனை உறுதி செய்கிறது.
இப்பொழுது கூட சமீபத்தில் நம் நாட்டில் கூட தங்க நகைகள் 916 KDM என்று தர வரிசைக்குள் இருப்பதையே மக்கள் வாங்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தப்பட்டது. மேலும் முக்கியமாக நகை கடைகளில் இந்த முத்திரை பதித்த நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அதன்படி கடைகள் மற்றும் நிறுவனங்கள் அரசின் உத்தரவை ஏற்று பல மாற்றங்களை தங்களுடைய கடைகள் மற்றும் நிறுவனங்களில் கொண்டு வந்துள்ளன. இவ்வாறு அரசின் தர நிர்ணயத்தின் ஆணைப்படி முத்திரை பதித்த நகைகள் வாங்கும் போது அந்த தரத்தின் மீது அதனுடைய மதிப்பு அதிகரிக்கும் என்பதனை நமக்கு தெளிவுபடுத்திகிறது. ஏனென்றால் பிற்காலத்தில் அந்த தங்கத்தின் மதிப்பில் எந்த விதமான இழப்புகள் இல்லாமல் முழுமையான பயன்பாடுகள் நமக்கு வந்து சேர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தது. ஆகவே போலியை கண்டு ஏமாறாமல் தரம் முத்திரை பதித்த பொருட்களை வாங்கி பயன்படுத்தி வளமான வாழ்க்கைக்கு நாம் வழி வகுக்கலாம்.
சென்னை மக்களே.. ரெடியா.. 12ம் தேதி முதல் கன மழை வெளுக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அலர்ட்!
அண்ணாமலைக்குப் பின்னாடி.. விஜய்க்கு சீமான் கொடுத்த இடம்.. அந்த அன்புத்தம்பிதான் ஹைலைட்டே!
தவெக விஜய்க்கு பின்னால் இருக்கும் விஐபி யார்?.. பரபரக்கும் அரசியல் களம்.. அட, இவர் தானாமே!!
Delhi Ganesh.. 400க்கும் மேற்பட்ட படங்கள்.. ஹீரோ டு காமெடியன்.. மறக்க முடியாத டெல்லி கணேஷ்
நவம்பர் 10 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
விருச்சிக ராசிக்காரர்களே.. மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும் நாள்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு
2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?
நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!
{{comments.comment}}