World Smile Day .. "எங்கே.. என் புன்னகை... யார் கொண்டு போனது"

Oct 06, 2023,11:22 AM IST
- மீனா

"எங்கே.. என் புன்னகை... யார் கொண்டு போனது...."அப்படின்னு ஐஸ்வர்யா ராய் ஒரு  பாட்டில் பாடி நடனம் ஆடி இருப்பாங்க. ஆனா உங்கள் புன்னகையை யாராச்சும் கொண்டு போக முடியுமாங்க.. கண்டிப்பா யாராலும் அதை களவாடிச் செல்ல முடியாதுங்க . ஏனென்றால் அது உங்களுக்குள்ள தான் இருக்கு. அதை நீங்க மத்தவங்களை பார்க்கும்போது நம்முடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் போது எல்லோராலேயும் அதை உணர முடியும் .. உங்களாலும்தான்.

" அலோ.. ஸ்டாப் ஸ்டாப்.. நீங்க வழக்கமாக சாப்பாடு பத்தியும், டிரஸ் பத்தியும்தானே நிறைய பேசுவீங்க.. இன்னிக்கு என்ன திடீர்னு புன்னகையைப் பத்தி".. அப்படின்னு உங்க மைன்ட் வாய்ஸ் நினைப்பது எனக்கும் கேட்டுருச்சு..  அது ஒன்னும் இல்லங்க இன்னைக்கு உலக புன்னகை தினம். அதனாலதான் பாட்டு மூலமா உங்களுக்கு ஒரு  வாழ்த்து சொல்லலாம் என்று நினைத்தேன்.. சிரிச்சிட்டு படிங்க வாங்க.



அக்டோபர் முதல் வெள்ளி

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வெள்ளி அன்று உலக புன்னகை தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1963 ஆம் ஆண்டு ஹார்வி பால் என்பவர் ஒரு மேட்டரைக் கண்டுபிடித்தார்.. பெரிய சைஸ்ல "மஞ்சள் கலர் ஸ்மைலி பால்" பாத்திருக்கீங்களா.. அதைத்தான் இந்த ஹார்வி பால் கண்டுபிடித்தார்.  தன்னுடைய இன்சுரன்ஸ் கம்பெனிக்கு பிரச்சாரத்தின் மூலம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஸ்மைலி முகங்களை உருவாக்கி பயன்படுத்தினார். ஆனால் அதை உலகம் முழுவதும் நல்லெண்ணத்தையும் மகிழ்ச்சியையும்  பரப்புவதையும் உள்நோக்கமாக கொண்டிருக்கவும் விரும்பினார். ஆனால் நாள்போக்கில் அது வணிகமயமாக மாறி விட்டது. இதை பலரும் செய்து விற்க ஆரம்பித்து விட்டனர்.

இதை பால்  விரும்பவில்லை, அதற்காக கவலையும் பட்டார் .ஏனென்றால் இந்த ஸ்மைலி முகங்களை உருவாக்கியதன் நோக்கம் முற்றிலும் மாறிக்கொண்டு வருவதால். இருப்பினும்  ஹார்வி பால் அந்த ஸ்மைலி பந்துக்கு பதிப்புரிமை பெறாமல் போனதால் அந்த விற்பனையை அவரால் தடுக்க முடியவில்லை.  தன்னுடைய கண்டுபிடிப்பின் அசல்  அர்த்தத்தை மீண்டும் கொண்டுவர அக்டோபர் முதல் வெள்ளி அன்று புன்னகைக்காக அர்ப்பணிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நாளையே இன்று உலக புன்னகை தினமாக நாம் கொண்டாடுகிறோம். 



வாய் விட்டு சிரிப்போம்

2001 ஆம் ஆண்டு ஹார்வி பால் இறந்த சிறிது காலத்திற்குப் பிறகு ஹார்வி பால் புன்னகை அறக்கட்டளை நிறுவப்பட்டது. அப்போதிலிருந்து அந்த அறக்கட்டளை மகிழ்ச்சியான அரவணைப்புக்கு  அதிகாரப்பூர்வ ஆதரவாளராக பணியாற்றியது. ஆனால் நாமும் கூட இன்று மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து அவர்களுடைய புன்னகையும் பார்த்து நாமும் புன்னகை செய்து மகிழ்ச்சியாக வாழலாம். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் நாம் யாவரும் அறிந்த ஒரு பழமொழி. 

நம் முன்னோர்கள் நமக்காக கூறிச் சென்றதில்  இதற்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. ஏனென்றால் அதிகமான நம்முடைய உடல் வலியிருந்து, மன அழுத்தங்கள் போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, நம் மனதின் சந்தோஷமும் அதன் மூலம் வெளிப்படும் புன்னகையும் எவ்வளவு முக்கியம் என்று நாம் எல்லாருக்கும் தெரியும். அத்தகைய புன்னகையை நாம் ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்த  மறக்கக்கூடாது. அப்படி நாம் புன்னகை செய்யும்போது ஏற்படும் நன்மைகள் என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா?



சொல்கிறேன் கேளுங்கள்.

*மனநிலையை மேம்படுத்துகிறது
*ரத்த அழுத்தத்தை குறைக்கிறது
*மன அழுத்தத்தை போக்குகிறது
*சிறந்த உறவுகள் ஏற்படவும் உதவுகிறது
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
*நமக்கு ஏற்படும் உடல் வலியானாலும், மனவலி ஆனாலும் அதைப் போக்க புன்னகை மிகவும் உதவியாக இருக்கிறது
*மேலும் இதையெல்லாம் சீராக இருக்கும் பட்சத்தில் நம்முடைய ஆயுட்காலம் அதிகரிக்கவும் செய்கிறது.

இவ்வளவு நன்மைகள் இருக்கும் நம்முடைய புன்னகையை இந்த நாள் மட்டும் அல்லாமல் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் புன்னகைக்கும் போது அது நமது வாழ்நாளில் மிகவும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 
மற்றவர்களை பார்க்கும்போது அவர்கள் புன்னகை செய்யாவிட்டாலும் நீங்கள் செய்யும் புன்னகை அவர்களையும்  உங்களை பார்த்து புன்னகை செய்ய வைக்கும். இதனுடைய வல்லமை எப்படிப்பட்டது என்று தெரிகிறதா உங்களுக்கு. 

இவ்வளவு விஷயங்கள் இருக்கும் புன்னகையை ஏன் நாம் செய்யாமல் இருக்கணும்.

So... "கொஞ்சம் சிரிங்க பாஸ்"!

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்