- மீனா
உலக போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. போலியோ இல்லாத எதிர்காலத்தை நோக்கிய உலகளாவிய முயற்சிகளையும் அதேபோல் உலகில் இந்த போலியோவை ஒழிப்பதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் அவர்களின் தன்னலமற்ற தியாகங்களையும் நினைவு கூறுவதாக அமைந்துள்ளது. போலியோ வைரஸ் எளிதில் பரவுவதால் போலியோ தொற்று ஏற்படுகிறது. இந்த நவீன காலத்தின் தலையீடு காரணமாக போலியோ இப்போது அரிதானது என்றாலும் இது சுவாசத்தை நிர்வகிக்கும் மூளை பகுதியை பாதிக்கிறது. இதன் விளைவாக மரணம் கூட நேரிடலாம். அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை இல்லாத போலியோவை தடுப்பதற்கு போலியோ தடுப்பூசி போடுவது ஒன்றே முறையான வழியாகும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் போலியோ வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பதனை கிமு 1400 இல் இருந்த ஒரு எகிப்திய கலைப்பொருள் போலியோ போன்ற மூட்டு ஊனம் கொண்ட ஒரு நபரை கண்டுபிடித்ததின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 1800 களின் பெரும் பகுதிக்கு போலியோ மனிதர்களிடையே ஒப்பிட்டு பார்த்தால் அது அரிதான நோயாக தோன்றியது. 1900 களின் முற்பகுதியில் டிப்தீரியா ,டைபாய்டு மற்றும் காச நோய் போன்ற பல நோய்கள் குறைந்து கொண்டிருந்தாலும் நல்ல வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட போலியோ வைரஸ் போலியோ தொற்றை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மூலம் தான் போலியோ வைரஸை முற்றிலும் அழிக்க முடியும் என்பதனை ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மாசுபட்ட நீரின் மூலமாக கூட குழந்தைகளுக்கு போலியோ வைரஸ் தாக்கியுள்ளது. பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு அவர்களின் தாயிடம் இருந்து வரும் நோய் எதிர்ப்பு சக்திகள் ரத்தத்தில் இருந்தால் அதுவே போலியோ வைரஸ் தாக்காமல் நீண்ட காலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும். ஆகையால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம் .அது குறையும் போது போலியோ வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையாக போலியோ வைரஸை அழிக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது.
போலியோ இல்லாத உலகை உருவாக்குவதின் விளைவாக உலகெங்கிலும் போலியோ தடுப்பூசிகள் இன்னும் பரிந்துரைக்கப்படுகின்றன. குறிப்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவ்வப்போது போலியோ சொட்டு மருந்து நமது நாட்டிலும் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் ,போலியோ முதன்மையாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கிறது. 1988 ல் உலக அளவில் சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் போலியோ வழக்குகள் இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை 37 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி தான் .போலியோ தடுப்பூசியின் குறிக்கோள் வைரஸை ஒழிப்பதாகும். வைரஸின் பரவலை தடுக்க பெரும்பாலான நோய் தடுப்பு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதின் மூலம் அரசு தன்னுடைய நிலைப்பாட்டின் செயலை சிறப்பாக செய்து வருகிறது.
அதனால், நமது பங்கிற்கு நாமும் நம்முடைய சுற்றுச்சூழலை தூய்மையாக வைப்பதன் மூலம் இந்த போலியோ வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவலாம் .நம்முடைய குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு அறிவிக்கும் நாளில் இந்த போலியோ சொட்டு மருந்தை கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும் . ஏனென்றால் போலியோ நோயை சுமந்து கொண்டிருக்கும் ஒரு நபர் இருக்கும் வரை உலகம் முழுவதும் போலியோ பரவும் என்பது உண்மை.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}