உலக வளர்ச்சி தகவல் தினம்...இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா ?

Oct 24, 2023,04:54 PM IST

- மீனா


உலக வளர்ச்சி தகவல் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொது சபையில் அக்டோபர் 24ஆம் தேதி உலக வளர்ச்சி தகவல் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 49 ஆண்டுகள் ஆகின்றன. பல நாடுகளில் உள்ள வளர்ச்சிக்கான தடைகள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதனை விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் உருவாக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பெரும்பாலும்  இளைஞர்கள் ,வளர்ச்சி பிரச்சனையை தீர்ப்பதற்காக புத்திசாலித்தனமாக யோசித்தல் மற்றும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக உருவாக்குதல் போன்றவற்றின் நோக்கம் தான். 


1964இல் வர்த்தகம் மற்றும்  மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு நிறுவப்பட்டது. இது பல்வேறு நாடுகளின் வளர்ச்சி மற்றும் வர்த்தக பிரச்சனைகளை  கையாளுவதே இந்த அமைப்பை நிறுவியதற்கு பின்னால் உள்ள குறிக்கோள். இந்த அமைப்பு போக்குவரத்து நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தையும் கையாண்டது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் சர்வதேச சந்தைகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் வளர்ந்த நாடுகள் பிற  நாடுகளுக்கு இடையேயுள்ள வளர்ச்சியை ஒப்பிட்டு  அவற்றை  மேம்படுத்த உதவுகிறது. உலகம் முன்பு மாதிரியெல்லாம் கிடையாது. இப்பொழுது நாகரீக வளர்ச்சி ,தொழில் நுட்ப வளர்ச்சி ,தகவல் பரிமாற்ற  தொழில்நுட்ப வளர்ச்சி என்று மிகவும் முன்னேறிவிட்டது. இத்தகைய உரையாடல்கள் அதிகமாக வயதானவர்களிடம் இருந்து கேட்க முடிகிறது. 




முன்பெல்லாம் ஒரு தகவலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு  சேர்ப்பது என்பது மிகவும் கடினமான  விஷயமாகத்தான் இருந்தது .ஆனால் இன்றோ உலகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒரு நிமிடத்திலே தகவலை யாருக்கு வேண்டுமானாலும் பரிமாறிக் கொள்ள முடியும். இது மட்டுமல்லாமல் உலக நாடுகளின் வளர்ச்சியையும் ஒவ்வொரு நாட்டில் உள்ளவர்களும் தெரிந்து கொள்வதற்கும் இந்த தொழில்நுட்ப மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதை போல் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களும்  இன்று அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் பக்கத்தில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே வாங்கி பயன்படுத்தி வந்த நாம் இன்று ஒவ்வொரு நாட்டிலும் அந்த  நாட்டில் விளையும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை  எந்த நாடுகளுக்கு தேவைப்படுமோ அந்த நாடுகளின் இறக்குமதி செய்வதின் மூலம் மற்ற நாடுகளின் பொருட்களையும் பயன்படுத்தும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துள்ளது. 


எனவே எல்லா நாடுகளுக்கும் அந்த நாட்டின் பொருள்களை வாங்கிக்கொள்ள ஏற்றுமதி, இறக்குமதி மிகச் சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.   வெளிநாட்டில் வேலை செய்பவர்களை பார்க்கும்போது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்ப்பது உண்டு. ஆனால் இன்று வெளிநாட்டில் வேலை என்பது சாமானியர்களுக்கும் வசப்பட்டு வருகிறது .மேலும் தன்னுடைய படிப்புற்கு ஏற்றது போல் வெளிநாடுகளில் வேலை கிடைக்கப்பெற்று அங்கேயே வாழ்வதற்கான சூழ்நிலையும் அமைகிறது.  இதற்கும் முக்கிய காரணமாக அந்த நாட்டின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் அந்நாட்டின் மதிப்பில் வாங்கப்படும் சம்பளம் சொந்த நாட்டில் உள்ள உறவினர்களுக்கு  அனுப்பப்படும் போது  பணம் , பொருளின் பரிமாற்றத்தின் மூலமும் அவர்களின் சொந்த நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. 


இப்படி வெளிநாட்டில் வேலை செய்பவர்களையும் தொடர்பு கொள்வதற்கு முன்பெல்லாம் அதிக பணம் செலவழிக்க வேண்டி இருந்தது.  ஆனால் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நம்முடைய கையில் உள்ள ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் மூலம் அவர்களை  எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது. உலகத்தில் உள்ள மற்ற நாடுகளில் நடக்கும் சிறு விஷயங்கள் முதல் பெரிய விஷயமான போர்  வரை நம்மால் இன்று மிக சுலபமாக தெரிந்து கொள்ள முடிகிறது .இதற்கு முக்கிய காரணம் உலகத்தில் அடைந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சி தான். மேலும் வர்த்தகம் என்பது மிகவும் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இன்று நமக்கு தேவையான பொருட்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வர்த்தகம் மூலம் நம்மால் வாங்கிக் கொள்ள முடிகிறது. முன்பெல்லாம் விசேஷ நாட்களில் கடைகளில் சென்று எடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால் இன்றைய அவசர உலகத்தில் இத்தகைய வர்த்தகங்களும் அநேகருக்கு அவர்கள்  நேரத்தை மிச்சப்படுத்தி, இத்தகைய ஆன்லைன் வர்த்தகம் வளர்ச்சி அடைந்து யாவருக்கும்  பயன்படும் வகையில் மாறி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்