புத்தகம் புதிய புத்தகமே.. இன்று World Book Day.. வாசிப்பை சுவாசியுங்கள்.. அறிவுக்கு நல்லது!

Apr 23, 2024,09:23 AM IST

- சந்தனகுமாரி


வாசிப்புப் பழக்கம்.. பலருக்கும் அது இன்று பழங்கதையாகி விட்டது. இன்னிக்காச்சும் இதை படிச்சு முடிக்கணும் என்று ஆசைப்படுவோம்.. ஆனால் அதற்காக நேரம் ஒதுக்க நமக்கு நேரம் வாய்க்காது. பலருக்கு புத்தக வாசிப்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. இன்றைய குழந்தைகளில் பலரும் பாடப் புத்தகத்தைத் தவிர வேறு புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் இல்லாமல்தான் வளர்கிறார்கள்.


எப்படி நமது உயிர் வாழ ஆக்சிஜன் தேவையோ அது போலத்தான் நமது அறிவு வாழ, புத்தக வாசிப்பு என்பது  மிக மிக அவசியமாகும். படிக்கும் பழக்கம் இல்லாதோரின் சிந்தனை திறம்பட்டு விளங்குவது சிரமமானதாகவே இருக்கும். நிறையப் படிக்க வேண்டும்.. படித்தது குறித்து சிந்திக்க வேண்டும். சிந்தனைதான் மனிதனை சீரியவராக மாற்ற உதவும்.




உலகில் இறப்பு என்று ஒன்று இல்லாதது புத்தகம் மட்டுமே. காலத்தால் அழியாத காவியம். ஓலைச்சுவடியில் ஆரம்பித்து காகிதத்தால் கட்டமைக்கப்பட்டு இன்று இணையத்தில் வந்து நிற்கிறது வாசிப்பு. உலகெங்கும் பயணிக்க புத்தகத்திற்கு அனுமதி உண்டு. நாம் தேடும் அனைத்தும் புத்தகத்தில் உண்டு. நன்மை, தீமை, வெற்றி, தோல்வி, முயற்சி, ஏற்றம், இறக்கம் அனைத்துக்கும் ஆரம்பமும், முடிவும் புத்தகத்தில் உள்ளது. 


மக்காக இருக்கும் ஒருவனை சிந்திக்கத் தூண்டுகிறது. அறிவை வளர்க்கிறது. மனச்சோர்வோ, மனக்கஷ்டமோ, துயரமோ உண்டாகும் சூழ்நிலைகளில் நமக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்து வாசிப்பதன் மூலம் பிரச்சனைக்கு ஒரு தெளிவான முடிவு கிடைக்க வாசிப்பு உதவுகிறது. நம்முடைய சிந்தனைகள் வேறு எங்கும் செல்லாமல் மன நிம்மதியுடனும் அமைதியுடனும் இருக்க புத்தக வாசிப்பு பயனுள்ளதாக உள்ளது. அதிக அளவில் புத்தகங்கள் வாசிக்கும் பொழுது என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை நமக்கு கிடைக்கிறது, புதிய சிந்தனைகளுக்கு வழி பிறக்கிறது. 


நாம்யார் என்பதை கூட சில புத்தகங்கள் நமக்கு தெளிவாக விளக்குகின்றன. சிக்மண்ட் பிராய்ட் என்னும் உளவியல் அறிஞர் உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்கு பயிற்சி புத்தகம் வாசிப்பது என்று அழகாக எடுத்துக் கூறியுள்ளார். சரித்திர வீரர் நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், புத்தகம் வாசிக்க அனுமதி வேண்டும் என்று கேட்டு படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். 




புத்தகம் வாசிப்பது ஒரு மனிதனை நல்வழிப் பாதையில் கொண்டு செல்கிறது. புத்தகம் வாசிப்பதன் மூலம் ஏற்கனவே நாம் கொண்டுள்ள கருத்துகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி புதிய கருத்தினை உருவாக்க உதவுகிறது. புத்தக கருவறையான நூலகத்திற்கு ஒருமுறை சென்று புத்தகம் படித்தாலே போதும், நமக்குள் ஒரு ஒளிவட்டம் தோன்றுவதை உணர்வோம். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று மகாத்மா காந்தியை கேட்டதற்கு நூலகம் கட்டுவேன் என்று சொன்னார். அந்த அளவுக்கு புத்தக வாசிப்பு உலகில் மிக முக்கியமானதாக இருக்கிறது.


வெற்றி பெற்றவர்கள் புத்தகத்தை வாசிக்க பழகி இருப்பார்கள், தோல்வியுற்றவர்கள் புத்தக வாசிப்பை சுவாசிக்கத் தவறியவர்களாக இருப்பார்கள்.




புரட்சிப் பாதையில் கை துப்பாக்கிகளை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே என்று கூறியவர் லெனின்.  ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனை காட்டுங்கள் அவனே எனது வழிகாட்டி என்று கூறியவர் ஜூலியஸ் சீசர். சிறைச்சாலையில் வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் புத்தக வாசிப்பே மட்டும் அனுமதியுங்கள் என்று கூறியவர் நெல்சன் மண்டேலா.  மனிதனுடைய மிகப்பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் தான் என்று கூறியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். புத்தகம் இல்லாத அறை உயிர், இல்லாத உடலுக்கு ஒப்பானது என்று கூறியவர் ஜூலியஸ் சீசர். ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்று கூறியவர் விவேகானந்தர்.  இப்படி உலகப் பெரும் தலைவர்களும் ஞானிகளும் போற்றிய ஒரு விஷயம் புத்தக வாசிப்பு.


1995 ஏப்ரல் 23 அன்று உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகின்றது.  நவீன காலத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களை விட மின்புத்தகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வாசிப்பு இன்று சுலபமாகி விட்டது.. விரும்பியதை இணையத்தில் எடுத்துப் படிக்க முடியும். ஆகவே புத்தக வாசிப்பை இன்று முதலாவது தொடங்குங்கள்.. புத்தகங்கள் தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல். ஆகவே இன்றிலிருந்து உறுதிமொழி எடுப்போம் அனைவரும் புத்தகம் படிப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்