மகளிர் ஐபிஎல் 2025 டி20 போட்டிகள்.. களம் புக காத்திருக்கும் மகளிர் படை.. இன்று கோலாகல தொடக்கம்

Feb 14, 2025,04:59 PM IST

வதோதரா:  2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் டி20 போட்டித் தொடர் இன்று இரவு 7:30 மணிக்கு வதோதராவில் தொடங்குகிறது. இதனைக் காண ரசிகர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.


இந்தியாவில் ஆண்கள் ஐபிஎல் தொடர் போன்று மகளிருக்கான ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மகளிர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு மும்பை அணியும், 2024 ஆம் ஆண்டு பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன.


பெங்களூரு ஆண்கள் அணி பல காலமாக சாம்பியன் பட்டத்தை வாங்க முடியாமல் தவித்து வரும் நிலையில் 2வது போட்டித் தொடரிலேயே பெங்களூரு மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை அடித்துச் சென்று அசத்தியது. 




இந்த நிலையில் இன்று 3வது போட்டித் தொடர் தொடறங்குகிறது. இந்த போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உத்திரப்பிரதேசம் வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் என ஐந்து அணிகள் மோதுகின்றன. மொத்தம் 22 போட்டிகள் கொண்ட மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும், எதிரணியினருடன்  தலா இரண்டு முறை போட்டியிடவுள்ளன.


2025ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல்  முதல் போட்டி வதோதராவில் தொடங்குகிறது. இதனையடுத்து பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை என நான்கு இடங்களில் நடைபெறுகிறது.


நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி இடையே முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு வதோதராவில் தொடங்க இருக்கிறது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த தடவையும் கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்