21ம் நூற்றாண்டு கடந்து இப்ப கூட பெண் கல்வி, பெண் விடுதலை, பெண் சுதந்திரம் இப்படி பேசிக்கொண்டே இருக்கோம்... ஏன் பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா, பெண்களுக்கு விடுதலை இல்லையா, பெண்கள் சுயமா யோசிக்கலையா, சுயமா சிந்திக்கலையா, அவர்களுடைய எல்லா முடிவும் அவங்க மட்டும் தானே எடுக்குறாங்க அப்படின்னு கேட்கலாம். ஆனால் அப்படி எதுவுமே இல்லை என்பது அந்த பொண்ணுங்களுக்கு மட்டும் தான் தெரியும்.
உலகம் மாறி இருக்கு, ஊர் மாறி இருக்கு, நடைமுறை பழக்க வழக்கங்கள் எல்லாமே மாறி இருக்கு. ஆனா ஒரு வீட்ல ஒரு பொண்ணு அப்படின்னு வரும்போது இது எதுவுமே மாறல அப்படிங்கறது மட்டும் தான் இங்கே நிதர்சனமான உண்மை. அப்ப பொண்ணுங்க யாரும் இப்ப எதுவுமே சாதிக்காம இருக்காங்களான்னு கேட்டா அப்படியும் சொல்ல முடியாது. உயர பறக்கிற வானூர்தில் இருந்து கப்பல், பஸ், ரயில் எல்லாமே பொண்ணுங்க ஓட்டுறாங்கதான். இல்லைன்னு சொல்லல. இது எல்லாமே பெண்களோட ஒரு விதமான வளர்ச்சி பாதை தான்.
ஆனா இவங்க எல்லாம் யாருன்னு பார்த்தா இவங்களோட பெற்றோர்கள் படிச்சவங்களா இருப்பாங்க இல்லைன்னா நமக்கு கிடைக்காத படிப்பு நம் பிள்ளைகளுக்கு கிடைக்கணும்னு நினைக்கிறவங்களா இருப்பாங்க. பிள்ளைங்க இப்படித்தான் இருக்கணும், அப்படிங்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும் ... ஆனா இதெல்லாம் வெறும் 30 சதவீத பெண்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒரு விஷயம்தான்... மீதி இருக்கிற 70% பொண்ணுங்க என்ன பண்றாங்கன்னு யாராவது யோசிச்சு இருக்கீங்களா.
எதுக்கு பெண்களுக்கு மட்டும் இவ்வளவு சலுகைகள்... பெண் கல்விக்கு மட்டும் ஏன் இவளோ முக்கியத்துவம் அப்படின்னு யாராவது சிந்தித்து இருக்கீங்களா... ஏன்னா இங்க பெண்களோட படிப்புங்கிற ஒரு விஷயம் பல நேரங்களில் கனவுகளாக மட்டும் தான் இருக்கும்... இப்ப கூட பொட்ட பிள்ளைக்கு படிப்பு எதுக்கு அப்படின்னு கேட்கிற பெற்றோர்கள் அதிகம்... பெண் குழந்தைகளை படிக்க வைக்க முடியல அப்படிங்கற நிலைமையில் இருக்கிற பெற்றோர்களுக்காக மட்டுமே நிறைய சலுகைகளும் சட்டதிட்டங்களும் இருக்கு.
அந்த சலுகைகளை உபயோகப்படுத்தி அதிலிருந்து பலன் செஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா சலுகைகள் இருந்தும் வேண்டாம் அப்படின்னு சொல்ற பெற்றோரும் இருக்கத்தான் செய்றாங்க. இன்னும் வருங்காலத்தில் படிப்பு இருந்தா மட்டும்தான் நம்மளால முன்னேற முடியும்னு சொல்ற ஒரு சொசைட்டில வாழ்றோம்.
ஒவ்வொரு ஆணும் நினைக்க வேண்டும்.. எத்தனை பெண்கள் நம்மோட பள்ளி படிப்புல இருந்து கல்லூரி படிப்பு வரைக்கும் நம்ம கூட பயணம் பண்ணி இருப்பாங்கன்னு யோசிச்சுப் பாருங்க.. விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இருப்பாங்க.. இன்னமும் நம்ம மக்கள் கிட்ட 21 வயசாயிட்டா பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிரணும் அப்படிங்கிற மனநிலை மட்டும் தான் இருக்கு. பொண்ணுங்க படிக்கணும் படிச்சு அவங்களோட சுய சம்பாத்தியத்தில வாழணும்ங்கறது இன்னும் இங்கு உள்ள மக்கள் யாருக்குமே தோண மாட்டேங்குது. அதுதான் நிதர்சனமான உண்மை. எவ்வளவு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், முற்போக்கு சிந்தனைகள் வேரூண்றி இருந்தாலும், இவர்கள் பெண்களைப் பார்க்கும் பார்வைகள் மட்டும் ஒன்றும் மாறுவதில்லை.
கட்டுரை: மாரீஸ்வரி
{{comments.comment}}