டெல்லி மெட்ரோவில்.. உட்கார இடம் இல்லை.. ஆண் பயணியின் மடியில் அதிரடியாக உட்கார்ந்த பெண்!

Apr 22, 2024,06:42 PM IST

டெல்லி: டெல்லி மெட்ரோவின் அக்கப்போர்களைப் பற்றி ஒரு மெகா சீரியலே எடுக்கலாம் போல. அந்த அளவுக்கு அக்கப்போர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.


நாட்டிலேயே அதிக சர்ச்சையான, பாதுகாப்பில்லாத மெட்ரோ ரயிலாக டெல்லி உருவாகி வருகிறது.  அதிக அளவிலான சர்ச்சைகளுக்கும், சண்டைக் காட்சிகளுக்கும் டெல்லி மெட்ரோவில் பஞ்சமே கிடையாது. தினசரி ஏதாவது ஒரு அக்கப்போரை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.


அரை குறை உடையோடு நடனமாடுவது, ஆபாசமாக பேசி சண்டை போடுவது, ஆபாசமாக உடை அணிந்து வருவது, ரீல்ஸ் எடுப்பது என்று டெல்லி மெட்ரோ மீது ஏகப்பட்ட குறைபாடுகள் உள்ளன. இந்த நிலையில், இப்போது ஒரு புது சர்ச்சை அரங்கேறியுள்ளது. ஒரு பெண் மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார் ஏறி உள்ளே வந்ததும் உட்கார முயல்கிறார். ஆனால் சீட் இல்லை. ஒரே கூட்ட நெரிசல்.




ஒரு இளைஞரிடம் நீ எழுந்து எனக்கு இடம் கொடு என்கிறார். அதற்கு அந்த வாலிபர் மறுக்கிறார். அடுத்த நிமிடம் அவர் செய்த காரியம் அனைவரையும் அதிர வைத்தது. அதாவது டக்கென அந்த இளைஞரின் மடியில் போய் உட்கார்ந்து கொண்டார் இப்பெண்.  அந்தப் பெண்ணின் அதிரடியைப் பார்த்த அந்த இடத்தில் அமர்ந்திருந்த இன்னொரு நபர் எதுக்குடா வம்பு என்று எழுந்து கொள்கிறார். அதற்குப் பின்னர் அந்தப் பெண் வசதியாக உட்கார்ந்து கொள்கிறார்.


அத்தோடு நில்லாமல், கொஞ்சம் இடம் கொடுப்பதால் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டோம். இதனால் எனக்கு ஒன்றும் இல்லை. உங்களுக்குத்தான் நல்லது. பஸ்களில் இடம் தருவதில்லையா.. அது போலத்தான் இதுவும் என்றும் அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கிறார்.


இந்த செயல் டெல்லி மெட்ரோ மீது மேலும் ஒரு கறையாக அமைந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கக் கூடும். டெல்லி மெட்ரோவும் காவல்துறையும் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களைத் தடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


கூட்ட நெரிசல் சமயத்தில் பெண்களுக்கு இடம் தர வேண்டும் தான்.. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதை இந்தப் பெண் இப்படி அடாவடியாக பெற்றது அநாகரீகமானது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்