என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. கொசுவைப் பிடிச்சு.. இந்தப் பொண்ணோட ஹாபி என்ன தெரியுமா?

Apr 19, 2025,10:03 AM IST

டெல்லி: ஒருவருக்கு பொழுதுபோக்கு என்பது வித்தியாசமாகவும், தொழிலாகவும், மகிழ்ச்சியாரமாகவும், திருப்திகரமாகவும், அமையும். ஆனால் இங்கு ஒரு பெண்ணின் வினோதமான பொழுதுபோக்கு பலரையும் வியக்க வைத்துள்ளது..!


அடடே ஆச்சரியக்குறி என்று சொல்லிக் கொண்டே படிக்க ஆரம்பியுங்கள். பொழுதுபோக்கு  என்பது மனதுக்கு ஓய்வையும், மகிழ்ச்சியையும் தருகிறது. அதாவது மனித வாழ்க்கையில் வேலைப்பளு அதிகமாக இருக்கும் காலத்தில், பொழுதுபோக்கு என்பது ஒரு தேவையாக மாறியுள்ளது. இது ஒருவரின் மன அழுத்தத்தை குறைத்து, சுறுசுறுப்புடன் வாழ்க்கையை முன்னேற்ற உதவுகிறது. அதேபோல் பொழுதுபோக்கு மூலம் மகிழ்ச்சியும் அதிகரிக்கிறது.


பொழுதுபோக்கு பலவகையாக இருக்கலாம். அவை ஒருவரின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் திறமைகளுக்கு ஏற்ப இருக்கும். அதன்படி, தனிநபர்கள் தங்களின் பொழுதுகளைக் கழிக்க சிலர் பாடல்கள் கேட்பதை விரும்புவார்கள், சிலர் புத்தகங்களைப் வாசிப்பார்கள், கவிதை எழுதுதுவார்கள், சிலரோ  படம் பார்த்து  ரசிப்பார்கள். அதேபோல் கைவினை பொருட்கள் செய்தல், தோட்டத் தொழில், விளையாட்டு, வீடுகளை தூய்மை செய்தல், அலங்கரித்தல், நடனம் ஆடுவது, யோகா போன்றவற்றில் ஈடுபடுவார்கள். 




அதைப்போல் ஒவ்வொருவருக்கும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பொழுதுபோக்கு வழிமுறைகள் உள்ளன. இவை நமது கற்பனை திறனை வளர்க்கும், நம் உள்ளத்தின் அமைதியை பாதுகாக்கும் ஒரு நல்ல வழியாக அமைகின்றன. மேலும், சில பொழுதுபோக்குகள், தொழிலாகவும் மாற்றிக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, புகைப்படக்கலை, இசை, எழுத்து போன்றவற்றின் மூலம் ஒருவர் ஆர்வத்தைத் தொழிலாக மாற்றி கொள்கின்றனர்.


எல்லா நாளும் வேலை, கடமை, ஓட்டம் என்று யாராலும் இருக்க முடியாது. சில நேரங்களில் நம்மை நாமே சந்தோஷப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அத்தகைய சந்தோஷம் தரும் எளிய வழியே  பொழுதுபோக்கு. இப்படி நம் உலகில் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் திறமைகளை பல்வேறு பொழுது போக்குகளில் ஈடுபடுத்தி தனது பாடைப்பாற்றலில் பலரும் சிறந்து விளங்கி வருகின்றனர். 


ஆனால் இங்கு ஒரு பெண்  வினோத பொழுதுபோக்கு ஒன்றை ரசித்து செய்து வருகிறாராம். என்னம்மா இதெல்லாம் ஒரு பொழுது போக்கா என சொல்லும் அளவிற்கு அந்த பெண்ணின் பொழுதுபோக்கு உள்ளது. அப்படி என்ன அந்தப் பெண்ணின் விசித்திரமான பொழுதுபோக்கு அப்படித்தானே கேக்குறீங்க.  வாங்க தெரிந்து கொள்வோம்.


அதாவது கொசுக்களை பிடித்து அடித்துக் கொன்று, அதை ஒரு டைரி போல ரெடி செய்து அதில் ஒட்டி வைத்து அந்த சம்பவம் குறித்த சிறு குறிப்பையும் சேர்த்து நோட் செய்து வருகிறாராம் இந்தப் பெண். கேட்டதுமே ஜெர்க் ஆகத் தோணுதுல்ல.. தொடர்ந்து படிங்க பாஸ்!


இன்ஸ்டாகிராமில் பிரபலமான  அகன்ஷா ராவத் என்ற பெண்ணின் தங்கைதான் இவர். கொசுக்களை கொலை செய்து அதை சேமித்து வைக்கும் வினோதம் பழக்கம் கொண்டவர். இறந்த கொசுக்களை பட்டியலிட்டு அதற்கு பெயர் சூட்டி இறந்த நேரம் நாள் எல்லாவற்றையும் குறித்து வருகிறார் இந்தப் பெண்.  அகன்ஷா ராவத் தனது தங்கையின் இந்த பழக்கத்தை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார். 


இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதெல்லாம் ஒரு பொழுதுபோக்காம்மா.. அடிச்சோமா.. தூக்கிப் போட்டு போனோமான்னு இல்லாம, ஏம்மா இந்த வேண்டாத வேலை என்று பலரும் செல்லமாக  அலுத்துக் கொள்கிறார்களாம்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்