Sulibhanjan Hills: ரீல்ஸ் விபரீதம்.. ரிவர்ஸில் போன கார்.. 300 அடி பள்ளத்தில் விழுந்து.. பெண் பலி!

Jun 18, 2024,01:53 PM IST

மும்பை:   ரீல்ஸ் பைத்தியம் நாட்டில் நாளுக்கு நாள் முற்றிக் கொண்டு வருகிறது. பல நேரங்களில் இந்த ரீல்ஸால் விபரதீங்கள் நடந்துள்ளன. ஆனாலும் மக்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. மகாராஷ்டிராவில் ரீல்ஸ் எடுக்கும்போது காரை ரிவர்ஸில் எடுத்த பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


என்ன  கொடுமை என்றால் அந்தப் பெண் கார் ஓட்டப் பழகியுள்ளாராம். காரை ரிவர்ஸ் எடுப்பது எப்படி என்று பழகியுள்ளார். அதை அவரது நண்பர் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போதுதான் கார் 300 அடி பள்ளத்தில் போய் விழுந்துள்ளது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. அந்தப் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.




அந்தப் பெண்ணின் பெயர் ஸ்வேதா தீபக் சுர்வாஸே. 23 வயதுதான் ஆகிறது. இவரும் இவரது நண்பர் சூரஜ் சஞ்சா முலே என்பவரும் அவுரங்காபாத்திலிருந்து, சுலிபஞ்சான் மலை என்ற சுற்றுலா தளத்திற்குப் போயுள்ளனர். நேற்று பிற்பகல் மலை உச்சியை அடைந்ததும், அங்கு தான் கார் ஓட்டுவது போல ரீல்ஸ் எடுக்க விரும்பியுள்ளார் ஸ்வேதா. அவருக்கு கார் ஓட்டத் தெரியாதாம்.


காரை மெதுவாக ரிவர்ஸ் எடுக்கிறேன். அதை நீ ரீல்ஸ் எடு என்று நண்பரிடம் சொல்லி விட்டு காரை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது பின்னால் இருந்த பள்ளத்தை சரியாக கவனிக்காமல் காரை பின்னோக்கி செலுத்த, கார் பள்ளத்தில் விழுந்தது. கார் பள்ளத்தை நோக்கிப் போவதைப் பார்த்த சூரஜ், ஸ்வேதாவை நோக்கி கிளட்ச்சைப் பிடி என்று பதட்டத்துடன் கத்தியுள்ளார். ஆனால் பதட்டத்தில் ஆக்சிலரேட்டரில் ஸ்வேதா காலை வைத்து விட்டது போல தெரிகிறது. கார் வேகமாக பின்னோக்கிப் போய் பள்ளத்தில் விழுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.


சுலிபஞ்சான் மலைப் பகுதியானது ஒரு இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலம் ஆகும். இங்கு தத்தாத்ரேயா கோவில் உள்ளிட்ட இடங்கள் உள்ளன.  மழைக்காலத்தில் இந்தப் பகுதியே பார்க்க ரம்மியமாக இருக்கும். இப்படிப்பட்ட இடத்திற்கு வந்து தேவையில்லாமல் ரீல்ஸ் எடுக்கப் போய் உயிரை விட்டுள்ளார் ஸ்வேதா.


என்னத்தை சொல்வது என்று தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்