6 மாசம் வெயில் ஓவர்.. சவூதியில் தொடங்கியது குளிர்காலம்.. மார்ச் வரை குளுகுளுதான்!

Oct 15, 2024,11:19 AM IST

ரியாத்:   சவூதி அரேபியாவில் வின்டர் எனப்படும் குளிர் காலம் தொடங்கி விட்டது. அந்த நாட்டில் ஆறு மாதம் குளிர்காலம், ஆறு மாதம் வெயில் காலம் என இரண்டே சீசன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


அரபு நாடான சவூதி அரேபியாவில் குளிர்காலம் அக்டோபரில் தொடங்கி மார்ச் மாதம் வரை நிலவும். இந்த சமயத்தில் கடும் குளிர் நிலவும். வெயிலை அதிகமாக பார்க்க முடியாது. அதிக அளவிலான மழைப்பொழிவையும் இந்த சீசனில்தான் சவூதி அரேபியர்கள் சந்திப்பார்கள்.




குளிர்காலத்தில் வழக்கமாக ஜெட்டாவில் சராசரியாக 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதுவே ரியாத் என்றால் 14 டிகிரி செல்சியஸாக இருக்கும். அல் டமாம் பகுதியல் 17 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதிகபட்சமாக ரியாத்தில்தான் நல்ல மழை இந்த சீசனில் கிடைக்கும்.


பனி மூட்டம் காலையில் அதிகமாக இருக்கும். இரவில் பனிப்பொழிவும் குளிரும் அதிகமாக இருக்கும். ஜிராஸ், டபுக், ஜபால் அல் லாஸ் போன்ற மலைகள் அடங்கிய பகுதிகளில் பனிப் போர்வை போர்த்தியபடி பார்க்கவே சூப்பராக இருக்கும்.


குளிர்காலத்தில் அதற்கேற்றார் போன்ற அவுட்டிங்குகள் அதிகம் இருக்கும். குறிப்பாக கேம்ப்பிங், மலையேற்றம் உள்ளிட்டவை களை கட்டியிருக்கும். குடும்பத்துடன் இதுபோன்ற முகாம்களுக்குச் சென்று மக்கள் சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.


அடுத்த ஆறு மாதத்தை குளுகுளுவென வைத்திருக்கப் போகும் குளிர்காலம் தற்போது வந்துள்ளதால் சவூதி மக்கள் ஹேப்பியாகியுள்ளனர். நாம் பார்க்கும் இந்தப் புகைப்படம் அல் கத்தீப் நகரில் எடுக்கப்பட்டது. நமது வாசகர் ஸ்டீபன் சதீஷ்குமார் அனுப்பிய இந்த புகைப்படத்தைப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.


Video: அல் கத்தீப் நகரில் நிலவிய பனி மூட்டம்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்