"விம்பிள்டன் சாம்பியன்".. ஜோகோவிக்கை அதிர வைத்த அல்காரஸ்.. குவியும் பாராட்டுகள்!

Jul 17, 2023,11:03 AM IST

லண்டன்: விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார் ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரஸ். இதுவரை இல்லாத அளவுக்கு நீண்ட நேரம் நடந்த இறுதிப் போட்டியில் நோவாக் ஜோகோவிக்கை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளார் அல்காரஸ்.


ஆடவர் விம்பிள்டன் ஒற்றையர் இறுதிப் போட்டி நேற்று விம்பிள்டனில் நடைபெற்றது. இதில் ஜோகோவிக்கும், அல்காரஸும் மோதினர். அல்காரஸ் இதுவரை ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் கூட வென்றதில்லை. ஆனால் இந்த விம்பிள்டன் தொடர் முழுவதும் அவரது ஆட்டம் பலரையும் கவர்ந்திழுத்தது. அந்த அளவுக்கு அட்டகாசமாக ஆடி வந்தார் அல்காரஸ்.




இறுதிப் போட்டி அனைவரும் எதிர்பார்த்தது போல சுலபமாக இல்லை. மாறாக இரு வீரர்களும் மாறி மாறி செட்களைக் கைப்பற்றிக் கொண்டே போனார்கள். ஜோகோவிக் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார் என்றால் அல்காரஸ் தனது ஆவேசத்தையும், விடாமுயற்சியையும் போட்டுத் தாக்கினார். இறுதியில், 1-6, 7-6 (6), 6-1, 3-6, 6-4  என்ற செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று புதிய விம்பிள்டன் சாம்பியன் ஆனார்.


இதுவரை நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டிகளிலேயே மிகவும் நீண்ட நேரம் நடந்த போட்டி என்ற சாதனை 2019ம் ஆண்டு இதே ஜோகோவிக் மற்றும் ரோஜர் பெடரர் இடையிலான போட்டிக்குத்தான் இருந்து வந்தது. அந்தப் போட்டி 4 மணி நேரம் 57 நிமிடங்கள் நடந்தது. அடுத்த இடத்தில் 2008ம் ஆண்டு நடாலுக்கும், பெடரருக்கும் இடையிலான போட்டி 4 மணி நேரம் 48 நிமிடங்கள் நடந்தது. தற்போது இந்த வரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது அல்காரஸ் - ஜோகோவிக் இடையிலான போட்டி. இப்போட்டி 4 மணி நேரம் 43 நிமிடங்கள் நடந்தது.


ரபேல் நடால் வாழ்த்து


புதிய விம்பிள்டன் சாம்பியன் அல்காரஸுக்கு உலகம் முழுவதும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. பல முன்னணி வீரர்களும் அல்காரஸை வாழ்த்தி வருகின்றனர். முன்னாள் சாம்பியனும் சக ஸ்பெயின் வீரருமான ரபேல் நடால் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,  இன்று எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். நம்முடைய ஸ்பெயின் டென்னிஸ் முன்னோடி மனோலோ சான்டனா எங்கிருந்தாலும் அங்கிருந்தபடியே உங்களை வாழ்த்துவார், மகிழ்ச்சி அடைவார்.  இறுக அணைத்து புதிய சாம்பியனை வாழ்த்துகிறேன் என்று  கூறியுள்ளார் நடால்.


ஜஸ்ட் 20 வயதேயான அல்காரஸ் வெற்றி பெற்றதும் அப்படியே தரையில் விழுந்து தனது வெற்றியைக் கொண்டாடினார். இந்த வெற்றியைப் பெற அவர் உழைத்த கடுமையான உழைப்புக்கு பலன் கிடைத்தது ஒட்டுமொத்த மைதானத்தையும் உற்சாகத்தில் மூழ்கடித்தது.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்