சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் யார் என்பதை தாண்டி விஜய் கட்சி போட்டியிடுமா என்பது தான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், டில்லி சட்டசபை தேர்தலுக்கான தேதியை இன்று வெளியிட்ட இந்திய தேர்தல் கமிஷன், அதோடு சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி வரும் பிப்ரவரி 05ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்தெந்த கட்சிகள் போட்டியிட உள்ளன, யார் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்பதை தாண்டி விஜய் கட்சி போட்டியிடுமா என்பது தான் தமிழக அரசியலில் தீவிரமாக ஆலோசிக்கப்படும் விஷயமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே தாங்கள் 2026ம் ஆண்டு தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக விஜய் அறிவித்திருந்தார்.
ஆனால் தற்போது தமிழகத்தில் இருக்கும் நிலை என்பது வேறு. தமிழகத்தில் நடக்கும் பல விஷயங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் விஜய் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக ஆளும் கட்சியான திமுக.,விற்கு எதிராக பல கருத்துக்களை முன் வைத்து வருகிறார். சமீபத்தில் பெரிதாக பேசப்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார விவகாரம் ஈரோடு இடைத் தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ் வெற்றிக்கழகத்தின் சார்பில் நிச்சயம் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படலாம் என்றே சொல்லப்படுகிறது.
அது மட்டுமின்றி 2026 சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு எப்படி இருக்கும்? தேர்தல் களத்தில் மக்களை சந்தித்து, மக்களோடு மக்களாக மக்களின் மனங்களில் ஆழமாக இடம் பிடிக்க ஈரோடு இடைத் தேர்தலை ஒரு சோதனை முயற்சியாக கூட விஜய் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் தன்னுடைய நிலைப்பாடு, முடிவு என்ன என்பதை விஜய் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.
விஜய் தனது கட்சி மாநாட்டில் ஒரு முறை பேசினார். அதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார். இந்த இரு பேச்சுக்களும் அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின, விவாதங்களைக் கிளப்பின.. படு சூடாக காணப்பட்டது அரசியல் மேடைகள். இந்த நிலையில் அவர் தேர்தல் களத்தில் குதித்தால் இன்னும் அனல் பறக்கக் கூடிய வாய்ப்புகளே அதிகம் உள்ளன என்பதால் அவரது கட்சி போட்டியிடுமா என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அதிமுகவைப் பார்த்து நூறு சார் போட்டு கேள்விகள் கேட்க என்னால் முடியும்..முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
தைப் பொங்கலும் வருது.. தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் ஆட்சி நடைபெறுகிறது.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
பொய்யைப் படிக்க வேண்டாம் என்பதால் வெளியேறிப் போயிருக்கலாம்.. ஆளுநருக்கு சீமான் ஆதரவு
ஈரோடு கிழக்கு தொகுதி.. திமுகவுக்கா அல்லது காங்கிரசுக்கா? .. காத்திருக்கும் வி.சி. சந்திரகுமார்
ஆளும் கட்சிக்கு ஒரு நீதி.. எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? .. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
திமுக போராடினால் வழக்கு.. பாமக போராடினால் கைதா? .. ஆஹா.. நல்லா இருக்கே .. டாக்டர் அன்புமணி
ISRO.. கன்னியாகுமரியிலிருந்து.. இன்னொரு இஸ்ரோ தலைவர்.. யார் இந்த வி. நாராயணன்?
அண்ணாநகர் பாலியல் வழக்கு.. அதிமுக செயலாளர் அதிரடி கைது.. கட்டப் பஞ்சாயத்து செய்த கொடுமை!
{{comments.comment}}