Test Audiences.. தமிழ் சினிமாவில் சாத்தியமா.. சரிப்பட்டு வருமா.. புதிய புரட்சி அரங்கேறுமா?

Dec 01, 2024,03:37 PM IST

சென்னை: ஹாலிவுட்டில் வெற்றிகரமாக இருக்கும் Test Audiences என்ற விஷயத்தை தமிழ் சினிமாவிலும் கொண்டு வர வேண்டும் என்ற யோசனையை ஒரு திரைப்பட விமர்சகர் முன் வைத்துள்ளார். ஆனால் அந்த ஐடியா சரிப்பட்டு வருமா என்பதுதான் பெரிய கேள்விக்குறியாகும்.


சமீப காலமாக ஸ்டார் நடிகர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் பல சரியாக ஓடுவதில்லை. குறிப்பாக இந்தியன் 2, கங்குவா படங்களைச் சொல்லலாம். இதுபோன்ற படங்கள் சரியாக போகாததற்குப்  பல காரணங்கள் கூறப்படுகின்றன. யூடியூபர்கள் என்ற போரவையில் வேண்டும் என்றே சிலர் குறிப்பிட்ட படங்களுக்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை அதீதமாக பரப்புகின்றனர். இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி படத்தின் வசூலை கடுமையாக பாதிப்பதாக திரையுலகில் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


படம் நல்லாருந்தா ஓடும்




அதேசமயம், படம் சரியாக இருந்தால் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்தாலும் அந்தப் படம் ஓடி விடும் என்று விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக விஜய் நடித்த லியோ, கோட் படங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். இந்தப் படங்களுக்கு மிகப் பெரிய அளவில் நெகட்டிவிட்டி பரப்பப்பட்டது. ஆனால் இந்த படங்கள் இரண்டுமே வசூலில் சாதனை படைத்தன என்று அவர்கள் சொல்கிறார்கள்.


படம் சரியாக இல்லாமல் போகும்போது எப்படி பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் அதை கைவிட்டு விடுவார்கள். எனவே விமர்சகர்களை மட்டுமே குறை சொல்வது நியாயமற்றது என்பது இந்த விமர்சகர்களின் வாதமாக உள்ளது.


இந்த நிலையில்தான் திரைப்பட விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை ஒரு யோசனையைத் தெரிவித்துள்ளார். அதாவது ஹாலிவட்டில் உள்ளது போல தமிழ் சினிமாவிலும் Test Audiences முறையைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார். Test Audiences என்றால் என்ன?


Test Audiences சரிப்பட்டு வருமா?




ஒரு படத்தை எடுத்து முடித்த பிறகு  அதை ஒரு பார்வையாளர் குழுவிடம் போட்டுக் காட்ட வேண்டும். இந்த குழுவினர் யார் என்றால்.. தீவிர சினிமா ரசிகர்களாக இருப்பார்கள். பல தரப்பட்ட பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். சமூகத்தின் பல்வே்று பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.. படத்தின் நிறை குறைகளை வெளிப்படையாக கூறுவார்கள்.. அவர்கள் சொல்வது கிட்டத்தட்ட திரைப்பட ரசிகர்களின் கருத்தாக இருக்கும். இவர்கள் சொல்லும் குறைகளை சரி செய்து பின்னர் படத்த ரிலீஸ் செய்வார்கள். அப்படிச் செய்யும்போது அந்தப் படம் வெற்றிகரமாக அமையும். இதை ஹாலிவுட்டில் பலரும் பின்பற்றி வருகிறார்கள்.


பாலிவுட்டிலும் கூட  இதை சிலர் செய்கிறார்களாம். இதைத்தான் கோலிவுட்டிலும் கொண்டு வர வேண்டும் என்று இந்த விமர்சகர் கூறியுள்ளார். ஆனால் இந்த யோசனை சரிப்பட்டு வருமா என்பதுதான் பெரிய கேள்விக்குறியாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.


ஹீரோக்கள் முதலில் ஏற்பார்களா?




1. நம்முடைய ஹீரோக்கள் குறிப்பாக பெரிய ஹீரோக்கள் இந்த கான்செப்ட்டை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம். உதாரணத்திற்கு.. அந்தப் படம் உச்ச நடிகர் ஒருவரின் படம் என்று வைத்துக் கொள்வோம். படத்தில் அவரது கேரக்டர், நடிப்பு குறித்து இந்த Test Audiences குழு அதிருப்தியோ அல்லது திருத்தமோ அல்லது அவர் சரியாகவே நடிக்கவில்லை என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்வோம்.. அதை அந்த நடிகர் ஏற்றுக் கொள்வாரா.. திரும்ப நடித்துக் கொடுப்பாரா.. மில்லியன் டாலர் கேள்வி இது.


2. பல நூறு கோடி பணம் போட்டு, பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் படத்தை எடுத்து முடித்த பிறகு இந்தக் குழுவிடம் காட்டும்போது அது சரியில்லை இது சரியில்லை என்று சொன்னால் அதை சரி செய்வது லேசுப்பட்ட காரியமா.. நிச்சயம் மிக மிக கடினமானது. காசு போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர் அதற்கு இசைவு தெரிவிப்பாரா என்பது மிகப் பெரிய கேள்வி. குறிப்பாக கங்குவா மாதிரியான படத்தில் முதல் அரை மணி நேரம் சரியில்லை என்று நடிகை ஜோதிகாவே சொன்னார். அப்படிப்பட்ட நிலையில் அந்த அரை மணி நேரத்தை கட் செய்ய வேண்டும் என்று இந்த Test Audiences குழு சொல்லியிருந்தால் அதை நிறைவேற்றுவது எளிதானதாக இருக்குமா என்பது சந்தேகம்.


3. நம்முடைய ஹீரோக்களிடமும், இயக்குநர்களிடமும் உங்களுடைய நடிப்பு, இயக்கம் சரியில்லை என்று சொன்னால் அப்படியா, ஓகே சரி செய்து கொள்கிறேன் என்று சொல்பவர்களை விரல் விட்டுக் கூட எண்ண முடியாது. மிக மிக அரிதான விஷயம் அது. அப்படிப்பட்ட திரையுலகில் Test Audiences என்ற முறை சரிப்பட்டு வருமா என்பதும் கேள்விக்குறியதே.


படைப்பாளிகளின் மனது பரந்துபட வேண்டும்




முதலில் நமது திரையுலகினர் மத்தியில் மனதளவிலும் சிந்தனை அளவிலும் மிகப் பெரிய புரட்சி நடைபெற வேண்டியுள்ளது. நாம் நடிப்பதே சரியானது, நாம் சிந்திப்பதே சரியானது, நாம் எடுப்பதே சரியானது என்ற அடிப்படையை அவர்கள் முதலில் தூக்கிப் போட வேண்டும். ரசிகர்களின் மன ஓட்டம், ரசனை மாற்றம், லேட்டஸ்ட் டிரண்ட் இப்படி எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வசதிகள் இப்போது வந்து விட்டன. அதை சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்தால் மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் விட்டு விட வேண்டும். இதைச் செய்யும் மனப் பக்குவம் முதலில் அவர்களுக்கு வர வேண்டும்.


பாகுபலி வந்ததும் அதேபோல படம் எடுக்க பலரும் முயன்று தோற்றனர். காரணம், அதை விட ஓவர் டோஸ் ஆகப் போனது அல்லது சொதப்பியது. விஜய்யின் புலி படத்தை அதற்கு உதாரணமாக கூறலாம். அந்தப் படத்தை இன்னும் சற்று மெனக்கெட்டு செதுக்கியிருந்தால் படம் நன்றாக வந்திருக்கக் கூடும். ஆனால் பல இடங்களில் சொதப்பல்கள் இருந்ததால்தான் அது தோல்விப் படமானது. அதேசமயம், மணிரத்தினம் எடுத்த பொன்னியின் செல்வன் கிட்டத்தட்ட பாகுபலி ரேஞ்சுக்கு இருந்ததை நாம் மறந்து விடக் கூடாது. இதனால்தான் அந்தப் படத்தை ரசிகர்கள் ரசித்து வரவேற்றனர், படமும் பிளாக்பஸ்டர் ஆனது.


மேக்கிங் நல்லா இல்லாட்டி உருப்படாது




கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் இணைந்த விக்ரம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இங்கு பெரிய அளவில் டெக்னாலஜி  வித்தை கிடையாது.. ஆனாலும் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ரிப்பீட் ஆடியன்ஸ் அமோகமாக கிடைத்தனர். காரணம், மேக்கிங்!.. கன்டென்ட் இல்லாவிட்டால் எந்தப் படமும் ஓடாது.. அது நடித்தது யாராக இருந்தாலும் சரி.. இந்தியன் 2 படமே அதற்கு சிறந்த உதாரணம்.. கமல்ஹாசனே நடித்தாலும் கூட படம் சரியில்லாவிட்டால் அது ஓடாது, ரசிகர்கள் வரவேற்க மாட்டார்கள்.


எனவே படத்தின் தயாரிப்பாளர் முதல் இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே சிறந்த படைப்பைக் கொடுக்கும் திறன் உள்ளவர்களாக, திறமையாக செயல்பட்டால் மட்டுமே அந்தப் படம் சிறப்பாக வரும்.. அதற்கு அனைவருமே ஆடியன்ஸ் ரசனையை, அவர்கள் விரும்புவதை முதலில் தெரிந்து மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அதைச் செய்யாமல் எந்த சிறந்த படைப்பையும் யாராலும் கொடுக்க முடியாது.


இப்போதைய சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் இப்படி பெருந்தன்மையான மனம் கொண்ட, ஆழ்ந்த திரைப் புலமை கொண்ட, கருத்துக்களை மனம் திறந்து வரவேற்கக் கூடிய படைப்பாளிகள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இருப்பதால் Test Audiences கான்செப்ட் சாத்தியம் என்று தெரியவில்லை.  இதில் இன்னொரு பிரச்சினையும் உள்ளது. Test Audiences குழுவில் இடம் பெறுவோர் நேர்மையாக இருக்க வேண்டும். அதில் ஏதாவது வில்லவங்கவாதிகள் புகுந்து விட்டால், வேண்டும் என்றே தப்புத் தப்பான கருத்துக்களை, யோசனைகளைச் சொல்லி விட்டால் ரிசல்ட் விபரீதமாக போய் விடும் அபாயமும் உள்ளது.


எனவே தமிழ் சினிமாவில் Test Audiences கான்செப்ட் கஷ்டம்தான்.. படைப்பாளிகளே அந்த வேலையையும் சேர்த்துச் செய்வதே பாதுகாப்பானது!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

அதிகம் பார்க்கும் செய்திகள்