போன முறை கொட்டிய .. "தேனி".. இந்த முறை இன்பம் தருமா தங்க தமிழ்செல்வனுக்கு.. சீட் தருமா திமுக?

Mar 18, 2024,08:10 PM IST
தேனி :  லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில், தேனி லோக்சபா தொகுதி திமுக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  கடந்த முறை அமமுக சார்பில் இத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தங்க தமிழ்ச்செல்வன் இந்த முறை திமுக சார்பில் இங்கு போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த தொகுதி எம்.பி.,யாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இருந்து வருகிறார். அதிமுகவின் ஒரே எம்.பி., இவர் மட்டும் தான என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக தேனி லோக்சபா தொகுதி அதிமுக.,விற்கு செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதி. அதனால் தான் கடந்த முறை லோக்சபா தேர்தலில் கூட தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் அதிமுக.,விற்கு தேனி தொகுதி மட்டும் கைகொடுத்தது. அதேசமயம், இந்தத் தொகுதியில் திமுகவும் பலமாகவே உள்ள கட்சியாகும்.

கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியை காங்கிரஸுக்குக் கொடுத்திருந்தது திமுக. அங்கு காங்கிரஸ் சார்பில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார்.  இந்த முறை, திமுக கூட்டணியில், தேனி தொகுதி திமுக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் திமுக.,வில் தேனி தொகுதியில் செல்வாக்கு நிறைந்த, அனைவருக்கும் தெரிந்த முகம் என்றால் அது தங்க தமிழ்செல்வன் தான். இவர் இதற்கு முன் அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்து தற்போது திமுக.,விற்கு வந்து சேர்ந்துள்ளார்.



கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டார் தங்க தமிழ்ச்செல்வன். அதில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்றார். அது பதிவான வாக்குகளில் 12 சதவீத வாக்குகள் ஆகும். இவர் போட்டியிடாமல் இருந்திருந்தால், அதாவது வாக்குகளைப் பிரிக்காமல் இருந்திருந்தால், இளங்கோவன் ஜெயித்திருப்பார். அதிமுக.,வில் ஜெயலலிதா இருந்த வரை தேனி தொகுதியில் ஓபிஎஸ்.,க்கு அடுத்த இடத்தில் தங்க தமிழ்ச்செல்வன் தான் இருந்து வந்தார். ஆனால் ஜெயலலிதாவிற்கு பிறகு கட்சியில் இவரது செல்வாக்கு, முக்கியத்துவம் குறைய துவங்கியது. 

நீண்ட காலமாக கட்சியில் நல்ல பதவியை எதிர்பார்த்து காத்திருந்த தங்க தமிழ்செல்வன், அதிமுக இரு அணிகளாக பிரிந்ததால், அப்போது டிடிவி. தினகரன் கட்சி ஆரம்பித்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபித்துக் காட்டியதால், அவரது கட்சியில் போய் சேர்ந்தார்.  ஆனால் ஆரம்பத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்.,க்கு எதிராக அதிகம் குரல் கொடுத்து வந்த தங்க தமிழ்செல்வனுக்கு அமமுக.,வில் அவர் எதிர்பார்த்தபடி பதவியோ, முக்கியத்துவமோ கிடைக்கவில்லை, தேர்தல் வெற்றியும் கிடைக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த தங்க தமிழ்செல்வன், ஆட்சியை பிடித்து, வெற்றிகரமாக ஆட்சி நடத்த ஆரம்பித்த திமுக கட்சியில் வந்து இணைந்தார். இருப்பினும் கட்சி பதவி கிடைத்ததே தவிர தேர்தல் வெற்றி எதையும் அவரால் உடனடியாக ருசிக்க முடியவில்லை. இந்த முறை திமுக. சார்பில் தேனியில் தங்க தமிழ்ச்செல்வன்தான் நிறுத்தப்படவுள்ளதாக ஸ்டிராங்காக பேச்சு அடிபடுகிறது. இதற்காகவே காங்கிரஸிடமிருந்து இந்தத் தொகுதியை திமுக எடுத்துக் கொண்டுள்ளதாம்.



தங்க தமிழ்செல்வனை வேட்பாளராக நிறுத்தினால் அது திமுக.,விற்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்க செய்யும்.  காரணம், தற்போது அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. வாக்குகள் தாறுமாறாக பிரிந்து போய் விட்டன. ஏகப்பட்ட பிரச்சினைகளில் ஓபிஎஸ் சிக்கித் தவிக்கிறார். பிரச்சனைக்கு முடிவு தெரியாமல் வழக்கு, விவகாரம், பஞ்சாயத்து என போய் கொண்டிருக்கிறது. தற்போது வரை இபிஎஸ் தான் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். அதிமுக கூட்டணியில் இதுவரை எந்த கட்சியும் இல்லை. தேமுதிக.,வுடன் பல நாட்களாக நடந்து வரும் பேச்சுவார்த்தையிலும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. 

வேறு வழியில்லாமல் அதிமுக தனித்து போட்டி என அறிவித்து, வேட்பாளர்களை நிறுத்தினால், தேனி தொகுதியில் செல்வாக்கானவர் என தற்போது அதிமுக.,வில் எவரும் கிடையாது. அப்படியே இருந்தாலும் தங்க தமிழ்செல்வனை எதிர்த்து, அதுவும் ஆளும் கட்சியாக இருக்கம் திமுக வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றி பெறும் அளவிற்கு எவரும் கிடையாது. தேனி தொகுதியை பொருத்த வரை தங்க தமிழ்செல்வனை வேட்பாளராக திமுக அறிவித்தால், அவரை எதிர்த்து மற்ற கட்சிகள் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், தேனி தொகுதி திமுக.,விற்கு தான் என்பதை இப்போதே கன்ஃபார்ம் செய்து கொள்ளலாம். 

திமுக தலைமை என்ன முடிவெடுக்க போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்