பிரதமர் நரேந்திர மோடி.. விண்வெளி வீரராக உருவெடுப்பாரா?.. நாசா தலைவர் பேச்சால் பரபரப்பு!

Nov 29, 2023,04:28 PM IST

டெல்லி: நாசா விண்வெளி நிறுவனம் சார்பில், இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு இறுதியில், சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று நாசா நிறுவன தலைவர் பில் நெல்சன் கூறியுள்ளார். அது பிரதமர் நரேந்திர மோடியாக இருக்கலாமா என்று அவரிடமே செய்தியாளர்கள் கேட்டபோது, ஏன் கூடாது என்று பதிலளித்துள்ளார் நெல்சன்.


அமெரிக்காவின் நாசா அமைப்பின் தலைவர் பில் நெல்சன் டெல்லிக்கு வந்துள்ளார்.  அவர் என்டிடிவிக்கு அளித்த ஒரு பேட்டியில்தான் நரேந்திர மோடி விண்வெளி வீரராக செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து நெல்சன் கூறுகையில், அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியர் ஒருவரை தேர்வு செய்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைப்போம் என்றார். அப்போது செய்தியாளர், பிரதமர் நரேந்திர மோடியால் விண்வெளி வீரராக செல்ல முடியுமா என்று கேட்டபோது, ஏன் முடியாது.. விண்வெளி மீதான ஆர்வம் கொண்டவர்தான் பிரதமர் மோடி. நானே அரசியல்வாதியாக இருந்தபோது விண்வெளி வீரராக சென்றவன்தான்.




\எந்த ஒரு அரசியல்வாதிக்கும் விண்ணில் பயணம் செய்வது என்பது அருமையான அனுபவமாக இருக்கும். குறிப்பாக ஒரு நாட்டின் தலைவராக இருக்கும் ஒருவருக்கு நிச்சயம் அந்த விருப்பம் இருக்கவே செய்யும். விண்வெளியிலிருந்து பார்த்தால் எதற்குமே எல்லையே கிடையாது.  அங்கு அரசியல் கிடையாது, மதங்கள் கிடையாது, இனப்பாகுபாடு கிடையாது.. பூமியின் குடிமகன் மட்டுமே அங்கு தெரிவார்.


நிலவில் மனிதர்கள் வசிக்கும் சாத்தியக் கூறுகள் குறித்த ஆர்டிமிஸ் திட்டத்தில் இந்தியா ஆக்கப்பூர்வமாக பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு தயாராக முடியும் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்