பிரதமர் மோடியின் தமிழக வருகை.. எழுச்சி பெறுமா பாஜக?.. திராவிட கட்சிகளின் சவால்களுக்கு "டஃப்" தருமா?

Feb 27, 2024,01:23 PM IST

திருப்பூர் : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் பாதயாத்திரை ஒன்றை நடத்தி வந்தார். ராமநாதபுரத்தில் துவங்கிய இந்த பாத யாத்திரை இன்று நிறைவு பெறுகிறது.  இதன் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (பிப்ரவரி 27) சென்னை வருகிறார்.


இதற்கு முன் ஜனவரியில் நடந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக தீர்த்தம் எடுத்துச் செல்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபட்டு, ராமேஸ்வரம் கடல் மற்றும் புனித தீர்த்தங்களில் நீராடி, இரண்டு நாட்கள் தங்கி விட்டு சென்றார். அதற்கு பிறகு தற்போது பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தமிழகம் வருகிறார். 


அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி




பிரதமரின் இந்த வருகை தமிழகத்தில் பாஜக, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தின் துவக்கமாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் பாஜக.,வில் செல்வாக்கை உயர்த்துவதற்காக அண்ணாமலை தமிழகத்தில் உள்ள 233 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி இந்த பாதயாத்திரையை மேற்கொண்டார். இந்த பாத யாத்திரை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நிறைவடைகிறது. இந்த நிறைவு விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கிறார். 


வடக்கில் பலம் வாய்ந்த தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்தாலும் தமிழகத்தை பொறுத்த வரை வெறும் 3 சதவீதம் ஓட்டு வங்கி தான் பாஜக.,விற்கு உள்ளது. அதுவும் அதிமுக.,வுடன் கூட்டணி வைத்ததன் காரணமாகவே கிடைத்தது. தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டுமே தற்போது சற்று பெரிய கட்சியாக உள்ளது. 


ஜன்னலைத் திறந்த அண்ணாமலை.. கதவை மூடிய ஜெயக்குமார்




ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணியில் உள்ளது. அதிமுக, சமீபத்தில் தான் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. அண்ணாமலையின் பேச்சுக்கள் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியது. இருந்தாலும் அதிமுக.,விற்காக கூட்டணி கதவுகள் திறந்து இருப்பதாக பாஜக., நூல் விட்டு பார்த்தது.


"அவர்கள் கதவை திறந்து வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் மூடி விட்டோம்" என கூறி ஒரே அடியாக பாஜக உடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக - பாஜக தலைவரின் வார்த்தை போரே அந்த கட்சிகளின் கூட்டணி முடிவுக்கு வர காரணமாகி விட்டன. இதனால் தற்போது கிட்டதட்ட தமிழகத்தில் தனித்து போட்டியிடும் நிலையிலேயே பாஜக உள்ளது. 


புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இணைய தயாராகி விட்டதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணியில் இணைய முயற்சி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிமுக கட்சி பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியிடம் இருப்பதால் ஓபிஎஸ் அணிக்கு பதில் சொல்லாமல், இபிஎஸ் அணியுடன் கூட்டணியை புதுப்பிக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில் பிரதமர் மோடியின் தமிழக வருகை பாஜக.,வில் புதிய எழுச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விறுவிறுப்படையும் தொகுதிப் பங்கீடு




மோடியின் தமிழக வருகைக்கு பிறகு, தமிழகத்திலும் பாஜக கூட்டணி குறித்து முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு பேச்சுக்களை முடித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, பிரசாரத்தை துவக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அதிமுக.,வுடன் கூட்டணி வைக்க பாஜக முடிவு செய்தால், 40 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளை கேட்கும், யாரெல்லாம் பாஜக சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட போகிறார்கள் என்பது அனைவரிடமும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.


சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜக.,வில் இணைந்த விஜயதாரணிக்கு பாஜக.,சார்பில் சீட் தரப்படலாம் என சொல்லப்படுகிறது. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி ஆகியவை பாஜக கூட்டணியில் இருந்தன. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களில் போட்டியிட்டு, ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்றது. அதுவும் அதிமுக தான் பெற்றது. 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக.,விற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. 


பலத்த நம்பிக்கையில் பாஜக




இந்த முறை பாஜக., கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தவிர வேற எந்த கட்சியும் கிடையாது. தமிழகத்தை பொறுத்த வரை திராவிட கட்சிகளுக்கு தான் செல்வாக்கு அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். இது பாஜக.,விற்கும்  தெரிந்த போதிலும் அதிமுக.,வை ரொம்பவே பகைத்துக் கொண்டது. தற்போது தமிழகத்தில் கோவை எம்எல்ஏ.,வாக வானதி சீனிவாசன் இருப்பதால் அதை வைத்து பாஜக பலத்தை அதிகரிக்க தான் இன்று பிரதமர் கலந்து கொள்ளும் கூட்டத்தையும் பல்லடத்தில் ஏற்பாடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 


இன்று பிரதமர் கூட்டத்திற்கு கிடைக்க போகும் வரவேற்பு தான், லோக்சபா தேர்தலில் பாஜக.,வின் எதிர்காலம் தமிழகத்தில் எப்படி இருக்கும் என்பதை நிரூபிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்