சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று தனது 7வது ஆண்டில் அடியெடுத்து வருகிறது. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் களத்தில் தொடர்ந்து ஒரு சக்தியாக திகழ்ந்து வரும் நிலையில் வருகிற லோக்சபா தேர்தலில் அதன் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்று கமல்ஹாசன் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்துள்ளது.
நடிகராக வலம் வந்த கமல்ஹாசன் அரசியலுக்கு வருவார் என்பதை அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் 2018ம் ஆண்டு அதிரடியாக அரசியலில் நுழைந்தார் கமல்ஹாசன். மதுரையில் நடந்த பிரமாண்ட மாநாட்டில் அவர் தொடங்கிய கட்சிதான் மக்கள் நீதி மய்யம். 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கப்பட்ட இந்த கட்சியின் தொடக்க விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை 2 தேர்தல்களில் மோதல்
கட்சி தொடங்கப்பட்டதும் தீவிரமாக களப் பணியாற்றி வந்த மக்கள் நீதி மய்யம், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இது தேர்தலிலும் எதிரொலித்தது. கட்சி தொடங்கிய பின்னர் இதுவரை 2 தேர்தல்களை மக்கள் நீதி மய்யம் கட்சி சந்தித்துள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் முதல் முறையாக மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. கமல்ஹாசன் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். அவர் இத்தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை.
இத்தேர்தலில் அக்கட்சிக்கு மொத்தம் 3.73 சதவீத வாக்ககுள் கிடைத்தன. 16 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அக்கட்சி பெற்றது. அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்து தோல்வியைத் தழுவினார்கள் என்றாலும் கூட நாங்கள் வந்து விட்டோம் என்ற அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வெளிப்படுத்த இந்த தேர்தல் முடிவு உதவியது. நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யத்திற்கு மக்களிடையே நல்ல ஆதரவு இருப்பதை தேர்தல் முடிவு காட்டியது.
நகர்ப்புற "நாயகன்"
குறிப்பாக கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட தொகுதிகளில் இக்கட்சிக்கு நல்ல வாக்குகள் கிடைத்தன. பல இடங்களில் 3வது இடத்தையும், பல இடங்களில் 4வது இடத்தையும் இக்கட்சி பெற்றது. கோவை தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் மகேந்திரன் கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் லட்சம் வாக்குகளைப் பெற்று அதிர வைத்தார்.
அதைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 180 தொகுதிகளில் போட்டியிட்டது. கமல்ஹாசன் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இத்தேர்தலிலும் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கை கூடவில்லை. கமல்ஹாசனும் கூட கோவையில் தோல்வியடைந்தார். மிக சொற்ப வாக்குகளில் அவர் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் தோற்றாலும் கூட தனது செல்வாக்கை மக்கள் நீதி மய்யம் கட்சி தக்க வைத்துக் கொண்டது.
தவிர்க்க முடியாத அரசியல் சக்தி
தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக மக்கள் நீதி மய்யம் இன்று திகழ்கிறது. திமுக அதிமுக தவிர்த்து உள்ள பிற கட்சிகள் மத்தியில் மக்கள் நீதி மய்யமும் ஒரு முக்கியமான கட்சியாக வலம் வருவதே இந்த 7 ஆண்டு கால அவர்களது அரசியல் பயணத்தின் முக்கிய சாதனையாகும். இந்த பின்னணியுடன் வருகிற லோக்சபா தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது மக்கள் நீதி மய்யம்.
இத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் கமல்ஹாசன் இணையலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் பலமாக உள்ளது. கமல்ஹாசனே கூட போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து இன்று கமல்ஹாசன் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிச்சம் போட்டுக் காட்டுவாரா கமல்?
கட்சியின் 7வது ஆண்டு விழா இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்திக்கவுள்ளார். அப்போது இதுகுறித்து தெரிவிக்கலாம் என்று தெரிகிறது.
சமீபத்தில்தான் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் டார்ச்லைட் சின்னத்தை மீண்டும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதனால் அக்கட்சியினர் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர். இந்த நிலையில், தனது கூட்டணி யாருடன், தனது நிலைப்பாடு என்ன என்பதை இன்று வெட்டவெளிச்சமாக்குவார் கமல்ஹாசன் என்ற எதிர்பார்ப்பில் கட்சியினர் காத்துள்ளனர்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}