ஆளுநர் பதவியில் தொடருவாரா ஆர்.என்.ரவி.. அல்லது புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா.. 31க்குள் தெரியும்!

Jul 29, 2024,06:49 PM IST

சென்னை: நாடு முழுவதும் 10 மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஆளுநராக பதவி வகித்து வரும் ஆர் என் ரவியின்  பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா.. அல்லது புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா.. என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


2024 -25 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பின்னர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமராக பொறுப்பேற்ற பின் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 




இந்த நிலையில் சமீபத்தில் பத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதேபோல, புதுச்சேரியில் கே.கைலாஷ்நாதன், தெலங்கானா மாநிலத்தில் ஜிஷ்னு தேவ் சர்மா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சந்தோஷ் கங்க்வார், ராஜஸ்தானில் ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, சத்தீஸ்கர் மாநிலத்தில் ராமன் தேகா, பஞ்சாப்  மாநிலத்தில் குலாம் சந்த் கட்டாரியா, சிக்கிம்  மாநிலத்தில் ஓம் பிரகாஷ் மாத்தூர், அசாம் மாநிலத்தில் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா, மேகாலயாவில் விஜயசங்கர் ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.


இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர். என். ரவியின் பதவிக்காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அவர் தொடரக் கூடும் என்ற பேச்சு உள்ளது. அதேசமயம், அவர் நீடிப்பாரா அல்லது புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா என்பதில் இதுவரை தெளிவு இல்லை. சமீப காலமாக தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே எந்த உரசலும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் புதிய ஆளுநர் வர வாய்ப்பிருப்பதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது.


எது எப்படி இருந்தாலும் 31ம் தேதியுடன் ஆளுநரின் பதவிக்காலம் முடிவதால், அதற்குள் ஆளுநர் நீடிப்பாரா அல்லது புதிய ஆளுநர் வருவாரா என்பது தெரிந்து விடும்.

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்