உச்சநீதிமன்ற ஜாமின் எதிரொலி.. மீண்டும் அமைச்சர் ஆவாரா செந்தில் பாலாஜி.. எந்த துறை கிடைக்கும்?

Sep 26, 2024,08:12 PM IST

சென்னை :  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் இன்று நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. இதில் பெரிய அளவில் அவருக்கு நிபந்தனை விதிக்கப்படாததால் அவர் மீண்டும் அமைச்சராக அதிக வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படுமா? அப்படி அளிக்கப்பட்டால் எந்த துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது?


அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக கூறி, செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சரான பிறகு, செந்தில் பாலாஜி மீது திடீரென நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமலாக்கத்துறை இந்த வழக்கை கையில் எடுத்தது.


58 முறை ஜாமின் மறுப்பு




கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜி பல மணி நேர விசாரணைக்குப் பின்னர் இரவில் அமலாக்கத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதற்கு பிறகு சில மாதங்களில் தன்னுடைய அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.


தன் மீதான பண மோசடி வழக்கில் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி பல முறை செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் கேட்கப்பட்டது. ஆனால் 58 முறை அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் ரூ.25 லட்சம் இரு நபர் ஜாமினில், நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 15 மாதங்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து இன்று செந்தில் பாலாஜி வெளியே வர உள்ளார். 


வழக்கமான, சாதாரண நிபந்தனைகள் மட்டுமே செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்டுள்ளது. அவர் அமைச்சராக தடை இல்லை என்றும் திமுக வழக்கறிஞரும் எம்பியுமான என்.ஆர். இளங்கோவும் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் அமைச்சராவது குறித்து உச்சநீதிமன்றம் எந்த நிபந்தனையும் விதிக்கவும் இல்லை. இதனால் அவர் மீண்டும் அமைச்சராக வாய்ப்பு அதிகரித்துள்ளது.


மீண்டும் அமைச்சராவாரா?




ஒருவேளை செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவருக்கு தமிழக கவர்னர் ஆர். என்.ரவி தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும். ஆனால் மோடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருந்து விட்டு ஜாமினில் வெளிவந்தாலும், முழுவதுமாக  வழக்கில் இருந்து குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படாத ஒருவருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி. அப்படி அவர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவும், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு ஒப்புதல் அளிக்கவும் மறுத்தால் அது மீண்டும் ஒரு அரசியல் சிக்கலை ஏற்படுத்தும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.


அமைச்சர் பதவி என்பது முதல்வரால் தீர்மானிக்கப்படுவது என்பதால் இது அவரது உரிமை என்பதாலும், செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க சட்டரீதியாக தடை இல்லை என்பதாலும் அவருக்கு மறுபடியும் அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


செந்தில் பாலாஜியுடன் சேர்த்து அமைச்சரவை மாற்றம்?




இது ஒரு புறம் இருந்தாலும், ஏற்கனவே பல மாதங்களாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரப் போகிறது. உதயநிதி துணை முதல்வராக போகிறார் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை திமுக.,வும், முதல்வர் ஸ்டாலினும் மறுத்து வந்த நிலையில், சமீபத்தில், அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் வரும். ஆனால் ஏமாற்றம் இருக்காது என முதல்வர் ஸ்டாலினே ஓப்பனாக பேட்டி அளித்திருந்தார்.


இந்த சூழலில்தான் தற்போது செந்தில் பாலாஜியும் வெளியில் வரவுள்ளார். இதனால் எப்போது மாற்றம் வரும்? எந்த மாதிரியான மாற்றம் வரும்? என்ற கேள்வி போய் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாற்றம் செய்யப்பட உள்ள தமிழக அமைச்சரவையில் மீண்டும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


அப்படி அவர் மீண்டும் அமைச்சர் ஆக்கப்பட்டால் ஏற்கனவே அவர் வகித்த மின்துறையே அவருக்கு மீண்டும் ஒதுக்கப்பட வாய்ப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவர் கவனித்து வந்த மின் துறை , கூடுதல் பொறுப்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் தான் ஒப்படைக்கப்பட்டது. அதனால் மின் துறை மீண்டும் செந்தில் பாலாஜியிடமே ஒப்படைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.


இதற்கிடையில் பல மாதங்களாக அமைச்சரவை மாற்றம் என்பது வெறும் பேச்சாக மட்டும் இருந்து வந்த நிலையில், சரியாக செந்தில் பாலாஜி ஜாமின் கிடைத்து வெளியே வர போகும் சமயத்தில் ஸ்டாலினே உறுதி செய்துள்ளதால், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க போகும் விஷயம் முதல்வருக்கு ஏற்கனவே தெரியுமா? அது தான் இந்த சமயத்தில் அமைச்சரவை மாற்றத்தை உறுதி செய்துள்ளாரா? என்ற கேள்விகளும் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.11.9 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

விஜய்க்கு கோபம் வருவதற்காக தான் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?: டாக்டர் தமிழிசை

news

Deepavali special.. மொறுமொறுன்னு.. சாப்பிட்டா விறுவிறுன்னு.. ரிப்பன் பூண்டு பக்கோடா!

news

தமிழ்நாட்டில் மழை.. தீபாவளியன்னிக்கு யாருக்கெல்லாம் கன மழை காத்திருக்கு.. லிஸ்ட்டைப் பாருங்க!

news

முத்திரை பதித்த பேரரசர்.. அரசியலின் முக்கிய அடையாளம்.. பசும்பொன் தேவருக்கு விஜய் புகழாரம்

news

டக்குன்னு அஜீத் பக்கம் திரும்பிய உதயநிதி ஸ்டாலின்.. கடகடவென பாலோ செய்த அமைச்சர்கள்!

news

Chennai Rains.. அண்ணாநகரை வச்சு செஞ்ச மழை.. 1 மணி நேரத்தில் 100 மி.மீ.. இது லிஸ்ட்லேயே இல்லையே!

news

Deepavali special sweet: செம டேஸ்ட்டு.. சூப்பர் ஸ்வீட்டு.. தீபாவளிக்கு முந்திரி கேக் செய்யலாமா?

news

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்