என்னாது.. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வரப் போறாரா ரோஹித் சர்மா.. பத்ரி டிவீட்.. ஸ்ரீனி மாமா ஆச்சரியம்!

Dec 17, 2023,10:36 AM IST

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். அணிக்குள்ளேயே கூட ரோஹித்துக்கு ஆதரவான குரல்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.


இந்த நிலையில் ரோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் டிவீட் போட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அதை விட முக்கியமாக சிஎஸ்கே அணி ரோஹித்தை பாராட்டி போட்ட டிவீட்டுக்கு, ரோஹித்தின் மனைவி மஞ்சள் நிற ஹார்ட்டின் போட்டு பரபரப்பை மேலும் இரட்டிப்பாக்கியுள்ளார்.


ரோஹித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர வாய்ப்பிருப்பதாக பிரபல ஸ்ரீனி மாமாவும் டிவீட் போட்டு ரசிகர்களின் இதயங்களை எகிற வைத்துள்ளார்.




மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 10 வருடம் அசத்தலான பயணத்தை மேற்கொண்டவர் ரோஹித் சர்மா. இதில் 5 முறை கப் அடித்து  சாதனை படைத்துள்ளார். தோனியை விட அதிக கப் அடித்த கேப்டன் என்ற பெருமையும் இவருக்கே உள்ளது.  மும்பை மண்ணின் மைந்தரான சச்சின் டெண்டுல்கரால் கூட ஐபிஎல்லி ஜொலிக்க முடியாத நிலையில், ரோஹித் சர்மா தனது அருமையான கேப்டன்சியால், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சவால் விடும் வகையில் மும்பையை மாற்றி வைத்துள்ளார்.

ரோஹித் சர்மா இல்லாத மும்பையா கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரது பங்கு மிகப் பெரியது. இந்த நிலையில்தான் அவரை மாற்றி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர். இதனால் ரோஹித் சர்மா வேறு அணிக்கு மாறுவாரா என்ற கேள்வி எழுந்தஉள்ளது. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு  வரக் கூடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில்தான் பத்ரிநாத் டிவீட் போட்டுள்ளார். மஞ்சள் ஜெர்சியில் ரோஹித் படத்தைப் போட்டு ரோஹித் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார். பிரபல ஸ்ரீனி மாமாவும் இதற்கு வாய்ப்பிருப்பதாக ஒரு டிவீட் போட்டுள்ளார்.

அனேகமாக தோனி அடுத்த ஆண்டு கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை. இந்த வருடத்தோடு அவர் கேப்டன் பதவிக்கு விடை கொடுக்கக் கூடும். அடுத்த ஆண்டு முதல் அணி நிர்வாகத்தில் அவர் முக்கியப் பங்கு வகிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே எப்படிப் பார்த்தாலும் சென்னை அணிக்கு ஒரு நல்ல கேப்டன் தேவை இருக்கவே இருக்கிறது.. அந்த வகையில் பார்த்தால் ரோஹித்தை பிடித்து உள்ளே போடவும் வாய்ப்பிருக்கிறது.

லாஜிக் எல்லாம் கரெக்டாதான் இருக்கு.. பார்க்கலாம்.. என்ன நடக்கப் போகிறது என்பதை.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்