க்ரீன்விச் நேரத்தை உஜ்ஜைனிக்கு மாற்றுவோம்...ம.பி., முதல்வர் சபதம்

Dec 24, 2023,11:19 AM IST
போபால் : மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள மோகன் யாதவ், உலகின் நிலையான நேரம் கணக்கிடப்படுவது இங்கிலாந்தின் க்ரீன்விச்சில் இருந்து மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியாக மாற்ற தன்னுடைய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் மற்றும் முக்கிய நகரங்களின் நேரம் என்பது இங்கிலாந்தின் க்ரீன்விச் நகரின் நேரத்தை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுகின்றன. இதையே ஜிஎம்டி (GMT)க்ரீன்விச் நேரம் என குறிப்பிடுறோம். க்ரீன்விச் நேரமே சர்வதேச நேரமாக கணக்கிடும் முறை 300 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா சார்பில் முடிவு செய்யப்பட்டது. முதலில் பாரீஸ் நகரத்தை மையமாக கொண்டு கணக்கிடப்பட்ட நேரம் பிறகு இங்கிலாந்திற்கு மாற்றப்பட்டது. 

மற்ற நாடுகளின் நேரங்கள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை அடிப்படையாக துவங்குகிறது. ஆனால் லண்டனின் க்ரீன்விச் நகரமானது நடுஇரவிலேயே துவங்கி விடுகிறது.  இந்த சமயத்தில் யாரும் தங்களின் வேலையை துவக்குவது கிடையாது. பிரைம் மெரிடியன் நேரமாக க்ரீன்விச் 1884 ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது.  ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் உஜ்ஜைனி நகரத்தை அடிப்படையாக வைத்தே உலகின் நேரத்தை இந்திய ஜோதிட மற்றும் பழங்கால கணிதவியல் முறை கணக்கிட்டது. 



இந்துக்களின் நம்பிக்கையின் படி உஜ்ஜைனி நகரம் கால பைரவர் குடிகொண்டிருக்கும் இடமாகும். இந்த கோவிலே உலகின் நேரத்தை நிர்ணயிக்கும் ஆதாரமாக விளங்குவதாக சொல்லப்படுகிறது. இந்த கருத்தை மனதில் வைத்தே மத்திய பிரதேச முதல்வர், சர்வதேச நேரத்தை உஜ்ஜைனியை அடிப்படையாக வைத்து கணக்கிடும் முறையை மீண்டும் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு புதிய வரைபடத்தை உருவாக்க உள்ளதாக தெரிவித்த மோகன் யாதவ், தற்போது சர்வதேச நேரத்தையே மத்திய பிரதேசத்தை அடிப்படையாக வைத்து முடிவு செய்யும் முறையாக மாற்றப் போவதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து ஒரு புறம் விமர்சனத்தையும், மறுபுறம் பாராட்டையும் பெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்