சென்னை : லோக்சபா தேர்தல் 2024க்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி தமிழகத்தில் பாஜக., கூட்டணிக்கு 3 சீட்கள் வரை கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை இது உண்மையானால் அடுத்து தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றிய ஒரு அலசல் இதோ...!
2019 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக., அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டது. ஆனால் இதில் பாஜக வேட்பாளர்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் மட்டுமே தேனி தொகுதியில் வெற்றி பெற்றார். இதனால் 2014ல் பொன் ராதாகிருஷ்ணன் பெற்ற ஒரே ஒரு இடத்தையும் திமுக கூட்டணியிடம் பறிகொடுத்தது பாஜக.
அதன் பிறகு, தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றி விட வேண்டும் என பாஜக., பல வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த முயற்சியும் பாஜக.,விற்கு கைகொடுக்கவில்லை. நோட்டாவை கூட முந்த முடியாத கட்சி என்ற நிலையில் தான் பாஜக.,வின் ஓட்டு வங்கி தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள கருத்து கணிப்புக்களின் படி தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு 3 இடங்கள் அல்ல, ஒரே ஒரு இடம் கிடைத்தால் கூட அது பாஜக.,விற்கு பலமாகவே கருதப்படும்.
கோவையில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜன், நெல்லையில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உறுதியாக வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதன் அடிப்படையில் பாஜக.,விற்கு 3 அல்லது அதற்கு மேலான தொகுதிகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டிருக்கலாம்.
ஒருவேளை அப்படி நடந்தால் தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும். அதோடு அவருக்கு உறுதியாக மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அதை விட முக்கியமாக பாஜக சார்பில் தமிழகத்தில் வெற்றி பெறும் அனைவரையும் கூட மத்திய அமைச்சர்களாக்கி, பாஜக தலைமை தமிழ்நாட்டை குஷிப்படுத்தவும் முயலலாம். ஜெயிப்பது ஒருவராக இருந்தாலும் ஏன் 4, 5 பேராக இருந்தாலும் கூட அத்தனை பேரையும் கூட மத்திய அமைச்சர்களாக்க பாஜக தயங்காது என்றே தெரிகிறது.
காரணம், இந்த வெற்றி பாஜக.,விற்கு 2026ல் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்து சட்டசபையிலும் இடம்பிடிக்க வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதால் வெற்றி பெற்றவர்களை அமைச்சர்களாக்கி, அவர்கள் மூலம் பல்வேறு செயல்பாடுகளை தமிழ்நாட்டில் நிகழ்த்தி, கூடவே திமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து, அதிமுகவையும் அடியோடு காலி செய்ய பாஜக முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி தமிழகத்தில் பாஜக வளர துவங்கினால் அது திமுக மற்றும் அதிமுக,விற்கு மிகப் பெரிய பின்னடைவாக அமையும். திராவிட கட்சிகளுக்கு மாற்றான மூன்றாவது சக்தியாக பாஜக.,வை மக்கள் ஏற்கும் நிலையும் ஏற்படும்.
நாயகன் மீண்டும் வர்றார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்.. செம கேட்ச்தான்!
CKS rocks.. அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி.. செம கேம் பிளான்தான்!
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}