முடிவெடுத்து விட்டதா அதிமுக.. "கூட்டணியைக் காக்க" ... அண்ணாமலையை மாற்றுமா பாஜக?

Sep 19, 2023,12:38 PM IST
- மீனாட்சி 

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக  அதிமுக கூட்டணியில் தொடர்ந்து விரிசல் இருந்து வரும் நிலையில் இந்தப் பிரச்சினையை பாஜக மேலிடம் உடனடியாக தீர்க்காவிட்டால் சுமூக நிலைமை சுத்தமாக இல்லாமல் போய் விடும்.. அது தேர்தல் சமயத்தில் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பின்னர் அதிமுக உடனான அக்கட்சியின் செயல்பாடுகள் மாறத் தொடங்கியது. அதிமுக உடன் கூட்டணியில் இருந்தாலும் தங்கள் கட்சியை தமிழ்நாட்டில் வளர்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அண்ணாமலை அடிக்கடி கூறிவந்தார். அதேநேரம் அவர் பேசும் கருத்துகள் பல நேரங்களில் கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தும் விதமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் இரு கட்சி தலைவரகளும தொடர்ந்து சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவதும் அதிகரித்தது.



குறிப்பாக ஜெயலலிதாவை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துப் பேசியது அதிமுகவில் பெரும்   சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அண்ணாமலை தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்தார். அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது பெரும் பிரச்சினையைக் கிளப்பியது. அண்ணாமலைக்கு எதிராக  முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம் ஆகியோர் கடுமையாக தாக்கிப் பேசினர். இதற்கு அண்ணாமலையும் கடும் பதிலடி கொடுத்தார். 

இரு தரப்பும் இப்படி மோதி வருவதால் கூட்டணியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை என்று ஜெயக்குமார் நேற்று அறிவித்து விட்டார். மறுபக்கம் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். ஜெயலலிதா பிர்ச்சினையின்போதே அண்ணாமலைக்கு எதிராக மேலிடத்தில் பெரியஅளவில் புகார் வாசித்தது அதிமுக. அவரால் கூட்டணியில் பெரும் சிக்கல் வரும் என்றும் கூறியது. ஆனாலும் அண்ணாமலைக்கு எதிராக பாஜக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



அண்ணாதுரை , ஜெயலலிதா, பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் குறித்து டெல்லி மேலிடத்தின் உத்தரவுப்படியே அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும், தமிழகத்தில் பாஜகாவால் காலுான்ற முடியாது என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். இந்த மோதல் காரணமா, இனியும் பாஜகவை நாம் தூக்கி சுமக்க வேண்டாம். அதிமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுத்து வருகிறது. மறுபக்கம் அதிமுக போய் விட்டால் பாஜகவின் நிலைமை விபரீதமாகி விடும் என்பதால் பாஜகவினர் தற்போது அடக்கி வாசிக்கின்றனர். 

ஆனால் அண்ணாமலை மட்டுமே ஆவேசம் காட்டிக் கொண்டிருக்கிறார்.  அண்ணாமலை தமிழகத்தில் பாஜகவின் நிலைமை தெரிந்து தான் இவ்வாறு பேசுகிறாரா? என்று அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாஜக மற்றும் அதிமுக மேலிடத் தலைவர்கள் இது குறித்து வாய் திறக்காத நிலையில், தற்போதைய நிலை நீடித்தால் கூட்டணியில் சுமூக நிலை ஏற்பட வாய்ப்பில்லை. பாஜக தலைமை அண்ணாமலையை கட்சி பொறுப்பில்  இருந்து நீக்குமா? அல்லது அண்ணாமலையின் வாயை குறைக்க சொல்லுமா? என்றும், அல்லது அண்ணாமலையை வைத்துக் கொண்டு பாஜவை வளர்க்கப்போகிறாதா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



மறுபக்கம் அதிமுக பாஜகவை அனுசரித்து போகுமா? அல்லது தனித்து போட்டியிடும் முடிவை எடுக்குமா என்றும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதிமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம், பாஜகவுடன் இணைந்ததால்தான் தங்களது வெற்றி வாய்ப்பு பறி போவதாக அவர்கள் கருதுகிறார்கள்.

பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என்று.

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்