விடை பெற்றார் ஜஸ்டின்.. அடுத்த பிரதமர் யார்.. கனடாவை அடுத்து ஆளப் போவது ஒரு தமிழ்ப் பெண்?

Jan 07, 2025,06:01 PM IST

ஒட்டாவா:  கனடாவின் அடுத்த பிரதமராக ஒரு தமிழ்ப் பெண் பதவியேற்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 


கனடாவின் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்து விட்டார். இதையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  பிரதமராக பலருடைய பெயர்கள் அடிபடுகின்றன. அதில் ஒருவர்தான் அனிதா ஆனந்த்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பிதான் அனிதா ஆனந்த். இவர் தற்போது ஜஸ்டின் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருக்கிறார்.  இவரது பெயர் பிரதமர் பட்டியலில் முக்கியமாக அடிபடுகிறது.




2019ம் ஆண்டு முதல் முறையாக ஓக்வில்லியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அனிதா ஆனந்த். பொது சேவைத் துறை அமைச்சராக 2019 முதல் 21 வரை பதவி வகித்துள்ளார். தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அப்போது பல்வேறு வகையான சீர்திருத்தங்களை தனது துறையில் அமல்படுத்தி பலரது பாராட்டுக்களையும் பெற்றார். 2024 செப்டம்பர் மாதம் முதல் இவர் போக்குவரத்து அமைச்சராக இருந்து வருகிறார். 


அனிதா ஆனந்த்தின் தந்தையின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். அவரது பெற்றோர் சென்னையில் பிறந்தவர்கள். தாயார் பஞ்சாபைச் சேர்ந்தவர்.  அந்த வகையில் ஒரு தமிழச்சியாகவும், ஒரு பஞ்சாபியாகவும் வளர்ந்து வந்தவர் அனிதா. இந்த இரு இனமும் தனது இனம் என்று எப்போதுமே பெருமையாக அவர் சொல்வார். இதுகுறித்து ஒருமுறை அவர் கூறுகையில்,  நான் தமிழ், பஞ்சாபி என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்வேன். இரு பெரும் கலாச்சாரமும் மிகவும் பழமையானது, அழகானது. அப்படிப்பட்ட கலாச்சாரங்கள் என்னுடையது என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை உண்டு என்று பெருமிதத்தோடு கூறியுள்ளார் அனிதா ஆனந்த்.


அனிதா ஆனந்த் பிரதமர் பதவிக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. அப்படி நடந்தால், உலகின் 2வது பெரிய நாடான கனடாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமை அனிதாவுக்குக் கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தங்கம் விலையில் மாற்றமில்லை.... நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்