- மீனாட்சி
சென்னை: அதிமுக அடுத்து என்ன செய்ய போகிறது? பாஜக நிலைமை என்னவாக இருக்கும்.... அண்ணாமலை பதவி தப்புமா.. இந்தக் கூட்டணி முறிவு நிரந்தரமா அல்லது தற்காலிகமா.. இப்படித்தான் எல்லோரின் மனதிலும், வாயிலும் கேள்விகள் தெறித்தோடிக் கொண்டிருக்கின்றன.
அதிமுக-பாஜக இடையே தொடர்ந்து மோதல் நிலவி வந்த நிலையில், மறைந்த தலைவர்களை கடுமையாக விமர்சித்த அண்ணாமலைக்கு அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் சூடான பதிலடி கொடுத்தனர். இதையடுத்து அண்ணாமலைக்கும் - அதிமுக தலைவர்களுக்கும் இடையே கடும் வாதம் வெடித்தது.
இதன் உச்சகட்டமாக யாரும் எதிர்பாராத நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக அதிடியாக விலகியது. விலகி 2 நாட்கள் ஆன நிலையில் பாஜக-அதிமுக ஆகிய இரண்டு தரப்பும் தற்பொழுது அமைதி காத்து வருகின்றன. வேகம் வேகமாக சண்டை போட்டு விட்டு இப்போது இரு தரப்பும் ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்து மூச்சு வாங்கிக் கொண்டுள்ளனர்.
இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் விவாதித்துக் கொண்டுள்ளனர். திமுக கூட்டணிக் கட்சிகளோ இந்த முறிவை கேலி செய்து வருகின்றனர். இது டிராமா என்று சொல்லி வருகின்றனர். மக்களுக்கும் கூட இந்த பிரிவு மீது இன்னும் முழுமையாக நம்பிக்கை வரவில்லை என்பதே எதார்த்தம். இந்த நிலையில், பாஜக தரப்பு, ரகசியமாக எடப்பாடி பழனிச்சாமியை அணுகியுள்ளதாகவும், அவரை சமாதானம் செய்துவருவதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் கூட்டணி பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாஜக தீவிரமாக உள்ளது. லேக்சபா தேர்தலில் திமுக வை வெல்ல பாஜக-அதிமுக கூட்டணி வேண்டும். இனி பிரச்சனை இல்லாதவாறு பார்த்துக்கொள்ளலாம். அதிமுகவை விடுத்து பாஜகவும், பாஜகவை விடுத்து அதிமுகவும் இருக்க முடியாது என்றும், இரண்டு கட்சிகளும் சேர்ந்து இருந்தால் தான் பலம் என்று பாஜக கூறிவருவதாக தெரிகிறது.
ஆனால் அதிமுக தொண்டகள் பலர் பாஜக உடன் கூட்டணி கிடையாது, தேவையில்லை, வேண்டவே வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறிவருகின்றனர். எடப்பாடி இது குறித்து இதுவரை பகிரங்கமாக எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாஜக கூட்டணியை தக்கவைத்து கொள்ள தமிழ்நாடு தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை மாற்றவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை மாற்றப்பட்டால் பாஜக-அதிமுக மீண்டும் சேர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த முடிவுக்கு பாஜக தலைமை போகுமா என்பதும் கேள்விக்குறிதான். ஒரு வேளை அதிமுகவை உண்மையிலேயே பாஜக சீரியஸாக எடுத்துக் கொண்டால், அண்ணாமலையை கழற்றி விட பாஜக தயங்காது. மாறாக, அண்ணாமலை தேவை என்று கருதினால் அதிமுகவை கண்டு கொள்ளாமல் விட வாய்ப்புண்டு.
இதில் எது நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. இரு தலைமைகளுக்கிடையே ரகசிய பேச்சு வார்த்தை வருகிறது. இதை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் உறுதிப்படுத்தியுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா.. அண்ணாமலை நீடிப்பாரா அல்லது விடை பெறுவாரா.. அதிமுக தீர்மானம் புஸ்வாணமாகுமா அல்லது புயலாக சுழற்றியடிக்குமா.. போகப் போகத்தான் தெரியும்.
LIC website.. இது தொழில்நுட்பக் கோளாறில்லை... அரசியல் கோளாறு.. மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!
கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
{{comments.comment}}